தள
குறையுற வுணர்தல்
தளியமர்ந் தேறின் வறிதே
யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று
போன்றொன்று
தோன்று மொளிமுகத்தே.
64
_______________________________________________________________
கடியச்செல்ல நிற்பின் - அரனது தில்லையையொப்பாள்
புனத்து மன்னுங்கிளியைக் கடிவதற்குச் சிறிதகல நிற்பினும்; கிளர் அளகத்து அளி அமர்ந்து ஏறின்
- இவளுடைய விளங்காநின்ற அளகத்தின்கண் வண்டுகள் மேவி யேறினும்; வறிதே இருப்பின் - இவள்
வாளா விருப்பினும்; ஒளி முகத்து பளிங்கு அடுத்த ஒளி அமர்ந்தாங்கு - இவனதொளியையுடைய முகத்தின்கண்ணே
பளிங்கு தன்னிறத்தை விட்டுத் தன்னையடுத்த நிறத்தை மேவினாற்போல; ஒன்று போன்று ஒன்று தோன்றும்-முன்
வேறொன்று போன்றிருந்து பின்னிவள் குறிப்பாகிய வேறொன்று தோன்றாநின்றது; அதனால் - அளிய
அண்ணல் எண் மன்னும் ஒன்று உடைத்து - அளிய அண்ணலது குறிப்பு மன்னுமொன்றுடைத்து; அஃதிவள் கண்ணதே
போலும் எ-று.
கிளியைமன்னுமென்புழி, மன்னும்:
அசைநிலையெனினுமமையும். ஒன்றுபோன்றொன்று தோன்றுமென்றது கிளியைக் கடியச் சிறிது புடைபெயரின்
நெட்டிடை கழிந்தாற்போல ஆற்றானாகலானும், வண்டுமூசப் பொறாளென்று வருந்தி வண்டையோச்சுவான்
போலச் சேறலானும், வாளாவிருப்பிற் கண்டின்புறுதலானும், இவள் கண்ணிகழ்ச்சி இவன்முகத்தே புலப்படாநின்றது
என்றவாறு. ஏறி வறிதேயிருப்பினென்பது பாடமாயின், அளியேறி அளகத்தின்கட் சிறிதிருப்பினுமெனவுரைக்க,
ஒளிர்முகமே யென்பதூஉம் பாடம்.
64
|