|
12
சேட் படை
12.21 தழையெதிர்தல்
தழையெதிர்தல் என்பது கண்ணயந்துரைப்பக்
கேட்ட தோழி இவ்வாறு ஏற்றல் எங்குடிக்கேலாவாயினும் நீ செய்தவுதவிக்கும் நின்பேரன்புக்கும்
ஏலாநின்றேனெனக் கூறித் தலைமகன்மாட்டுத் தழையெதிராநிற்றல். அதற்குச் செய்யுள்-
110. தோலாக் கரிவென்ற
தற்குந்
துவள்விற்கு மில்லின்தொன்மைக்
கேலாப் பரிசுள வேயன்றி
யேலேம் இருஞ்சிலம்ப
_____________________________________________________________
12.21. அகன்றவிடத் தாற்றாமைகண்டு
கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.
இதன்பொருள்: இருஞ் சிலம்ப- இருஞ்சிலம்பா; தோலாக்
கரிவென்றதற்கும் - எம்மை யேதஞ்செய்யவருந் தோலாக்கரியை நீவென்றதற்கும்; துவள்விற்கும் -
யான் குறைமறுப்பவும் போகாது பேரன்பினையுடையையாய் நீ விடாது துவண்ட துவட்சிக்கும்; இல்லின் தொன்மைக்கு
ஏலாப் பரிசு உளவே-எமது குடியின் பழமைக்கேலாத இயல்பையுடையவென்று எம்மாற் செய்யப்படாதன
வுளவே; ஐய-ஐயனே; மாலார்க்கு அரிய மலர்க் கழல் அம்பலவன் மலையில் -மாலார்க்குமரிய மலர்போலுங்
கழலையுடைய அம்பலவனது மலையின்கண்; கோலாப் பிரசம் அன்னாட்கு நீ தந்த கொய்தழை-வைக்கப்படாத
தேனையொப்பாட்கு நீ தந்த கொய்தழையை; அன்றி ஏலேம்-பிறிதோராற்றானேலேம் எ-று.
உளவே யென்னு மேகாரம்;
எதிர்மறை. அஃதென்போலவெனின் “தூற்றாதே தூர விடல்” (நாலடியார் - 75) என்றது தூற்றுமென்று
பொருள் பட்டவாறு போல வென்றறிக. அன்றியும். ஏலாப்பரிசுளவே யென்பதற்கு நாங்கள் இத்தழை
வாங்குவதன் றென்றது கருத்து. எமது குடிப்பிறப்பின் பழமைபற்றி அது சுற்றத்தார் கூடி வாங்குவதொழிந்து
நாங்களாக வாங்கினாற் குடிப்பிறப்புக்குப் பழிவருமென்பதனைப் பற்றியென்றவாறு. வழிபட்டுச்
காணலுறாமையின், மாலாரென இழித்துக் கூறினாரெனினுமமையும், உளவேலன்றி லேயேமென்பது பாடமாயின்,
தழை வாங்குகின்றவழி என்பொருட்டால் நீர் நுங்குடிக் கேலாதனவற்றைச் செய்யாநின்றீரென்று
தலைமகன் கூறியவழி, நீ செய்ததற்குக் கைம்மாறு செய்ய
|