New Page 1
பகற்
குறி
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ
போன்ற வனமுலையே.
128
________________________________________________________________
திசைதிசை பாயும் மலைச் சிலம்பா
- தேன் றிசைதோறும் பரக்கும் மலையையுடைய சிலம்பனே; வெள்ளி மலை அன்ன மால்விடையோன் புலியூர்
விளங்கும் - தனது வெள்ளிமலையாகிய கயிலையையொக்கும் பெரியவிடையையுடையவனது புலியூர் போலவிளங்கும்;
வள்ளி மருங்குல்-கொடிச்சியது மருங்குலை; வனமுலைவருத்துவ போன்றன - நல்ல முலைகள் வளராநின்றபடியால்
வருத்துவன போன்றன; இனி வரைந்தெய்துவாயாக எ-று.
சிலம்பென்பது
அதனையுடையனென்னும் பொருணோக்காது ஈண்டுப் பெயராய் நின்றது. புலியூர் புரையு மென்பதூஉம் பாடம்.
யாவருமறியாவிவ்வரைக்கண்வைத்த தேன் முதிர்ந்துக்கு அருவி போன்றெல்லாருங்காணத் திசைதிசை
பரந்தாற் போல, கரந்த காமம் இவள் கதிர்ப்பு வேறுபாட்டாற் புறத்தார்க்குப் புலனாய் வெளிப்படாநின்றதென
உள்ளுறையுவமை யாயினவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு; அச்சம். இவ்வொழுக்கம் புறத்தாரறி
யினிவளிறந்துபடும், இறந்துபட இவனுமிறந்து படுமென்னு நினைவினளாதலால், பயன்: வரைவுகடாதல்.
128
|