பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
290

New Page 1

 பகற் குறி

    முழங்குங் குரவை இரவிற்கண்
        டேகுக முத்தன்முத்தி
    வழங்கும் பிரானெரி யாடிதென்
       
தில்லை மணிநகர்க்கே.

127

13.13 பருவங்கூறி வரவு விலக்கல்

   
பருவங்கூறி வரவு விலகக்ல் என்பது உலகியல் கூறுவாள் போன்று குறிப்பால் வரைவுகடாவி, இனியிவ்வாறொழுகாது வரைவொடு வருவாயாக வெனத் தலைமகளது பருவங்கூறி, தலைமகனைத் தோழி வரவுவிலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

128. தள்ளி மணிசந்த முந்தித்
        தறுகட் கரிமருப்புத்
    தெள்ளி நறவந் திசைதிசை
        பாயும் மலைச்சிலம்பா

____________________________________________________________

கிளர்ந்து முழங்கும் குரவை இரவில் கண்டு மணி நகர்க்கு ஏகுக-குன்றரெல்லாருமெழுந்து முழங்குமிந்நிலத்து விளையாட்டாகிய குரவையை யிரவிற்கண்டு நாளை நினது நல்ல நகர்க்கேகுவாயாக எ-று.

    முத்தன் - இயல்பாகவே முத்தன்; முத்தி வழங்கும் பிரான்- முத்தியையேற்பார்க்கு வழங்குமுதல்வன்; எரியாடி - ஊழித்தீயின் கணாடுவான்- தென்தில்லை மணிநகர்-அவனது தெற்கின் கட்டில்லையாகிய மணிநகரெனக் கூட்டுக. ஏற்பார்மாட்டொன்றுங் கருதாது கொடுத்தலின் வழங்கு மென்றார். உலகியல் கூறுவாள் போன்று ஒருகானீவந்து போந்துணை யாலிவளாற்றுந் தன்மையளல்லளென்பது பயப்பக்கூறி, வரைவு கடாயவாறு, மெய்ப்பாடு; பெருமிதம். பயன்: குறிப்பினாற் பிரிவாற்றாமை கூறி வரைவுகடாதல்.

127

13.13.  மாந்தளிர் மேனி யைவரைந் தெய்தா
      தேந்த லிவ்வா றியங்க லென்றது.


   
இதன் பொருள்: மணி தள்ளி - மணிகளைத் தள்ளி; சந்தம் உந்தி-சந்தனமரங்களை நூக்கி; தறுகட் கரி மருப்புத் தெள்ளி -தறுகண்மையையுடைய யானையின் மருப்புக்களைக் கொழித்து; நறவம்