பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
289

 பகற் குறி

    சிறுகால் மருங்குல் வருந்தா
        வகைமிக என்சிரத்தின்
    உறுகால் பிறர்க்கரி யோன்புலி
        யூரன்ன வொண்ணுதலே.

126

13.12 தனிகண்டுரைத்தல்

   
தனிகண்டுரைத்தல் என்பது தலைமகளை யாயத்துய்த்துத் தலைமகனுழைச் சென்று, இஃதெம்மூர்; இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி, இன்றெம்மோடுதங்கி, நாளை நின்னூருக்குப் போவாயாகென உலகியல் கூறுவாள் போன்று, வரைவுபயப்பக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

127. தழங்கு மருவியெஞ் சீறூர்
        பெரும இதுமதுவுங்
    கிழங்கு மருந்தி இருந்தெம்மொ
        டின்று கிளர்ந்துகுன்றர்

__________________________________________________________

மலர்க்கொத்துக்களை; அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன்-வண்டுகணிறைந்த மலரையுடைய நின்னைம்பாற்கண் நிறைய வணிந்தேன்; தோகை - தோகையையொப்பாய்; சிறு கால் மருங்குல் வருந்தாவகை-சிறியவிடத்தையுடைய மருங்குல் வருந்தாவண்ணம்; தொல் ஆயம் மெல்லப் புகுக - பழையதாகிய ஆயத்தின்கண் மெல்லப் புகுவாயாக எ-று.

    அறுகானிறை மலரை யணிந்தே னென்றும், மலர்க் கொத்துக்களை யுடைய தோகாயென்றும், உரைப்பாருமுளர். நிறைய வென்பது குறைந்து நின்றது. காலென்னுஞ்சினை பிறர்க்கரியோ னெனத்தன் வினைக்கேலா வெழுத்துக்கொண்டது. இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றாமை நீக்குதல்.

126

13.12.  வேயோத்த தோளியை ஆயத் துய்த்துக்
      குனிசிலை யண்ணலைத் தனிகண்டு ரைத்தது.


   
இதன் பொருள்: பெரும - பெரும; தழங்கும் அருவி இது எம் சீறூர்-தழங்காநின்ற அருவியையுடைய விஃதெமது சீறூர்; மதுவும் கிழங்கும் அருந்தி இன்று எம்மொடு இருந்து - இதன்கண் யாமருந்துந் தேனையுங் கிழங்கையு நீயுமருந்தி இன்றெம்மோடுதங்கி; குன்றர்