பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
306

New Page 1

பகற் குறி

    நொடிவார் நமக்கினி நோதக
        யானுமக் கென்னுரைக்கேன்
    தடிவார் தினையெமர் காவேம்
        பெருமஇத் தண்புனமே.

139

13.25 தினையொடுவெறுத்துவரைவுகடாதல்

   
தினையொடு வெறுத்து வரைவு கடாதல் என்பது பகல்வரல் விலக்கி வரைவுகடாயதோழி, இத்தினைக்காவறலைக்கீடாக நாமவனை யெதிர்ப் படலாமென்று நினைந்து தினையை வித்திக் காத்தோம்; அது போய்த் தீவினையை வித்திக்காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்ததெனச் சிறைப்புறமாகத் தினையொடு வெறுத்து வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

140. நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்
        திருந்தம் பலத்துநின்று
    புனைவித்த ஈசன் பொதியின்
        மலைப்பொருப் பன்விருப்பில்

_____________________________________________________________

நின்றுமென்றும்மை கொடுத்தார். மலயத்துநின்றும் வருந்தே னென்றுரைப்பாருமுளர். இப்பொருட்கு வேங்கை மலயத்தை யணைந்ததோரிடத்து நின்றதாக வுரைக்க. கடி-புதுமையுமாம். வண்டொழுங்கினது நெடுமைபற்றி வார்களிவண் டென்றாள். இதுவுமதுவாகலான், அலர்தூற்ற வென்பதற்குத் தன்னோடு பயின்றாரைக் கண்ணோட்டமின்றி வருத்தாநின்ற தென்று புறங்கூறவென்று முரைக்க, மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கல்.

139

13.25.  தண்புனத்தோடு தளர்வுற்றுப்
      பண்புனைமொழிப் பாங்கிபகர்ந்தது.

   
இதன் பொருள்: என் நெஞ்சத்து இருந்து தன்னை நினைவித்து-தானே வந்திருந்து திருத்த வேண்டுதலின் என்னெஞ்சத்துப் புகுந்திருந்து தன்னை யானினையும்வண்ணஞ்செய்து; அம்பலத்து நின்று - அம்பலத்தின் கட்டன்றிருமேனி காட்டிநின்று; புனைவித்த ஈசன் பொதியின்மலைப் பொருப்பன் விருப்பின் - என்னாற்றன்னைப் புகழ்வித்துக்கொண்ட ஈசனது பொதியின் மலைக்கணுளனாகிய பொருப்பன் மேல்வைத்த விருப்பினால்; தினை வித்திக்