பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
307

பகற் குறி

    தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
        றேமுக்குச் சென்றுசென்று
    வினைவித்திக் காத்து விளைவுண்ட
        தாகி விளைந்ததுவே.

140

13.26 வேங்கையொடுவெறுத்துவரைவுகடாதல்

   
வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல் என்பது தினையொடுவெறுத்து வரைவு கடாயதோழி, இவ்வேங்கை யரும்பிய ஞான்றே அரும்பறக் கொய்தேமாயின் இவர் இன்று நம்மைக்கெடுப்பான் வேண்டி இத்தினைகெட முயலுமாறு முண்டோ? யாமது செய்யப் பெற்றிலேமென வேங்கையொடு வெறுத்து வரைவுகடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

141. கனைகடற் செய்தநஞ் சுண்டுகண்
        டார்க்கம் பலத்தமிழ்தாய்
   வினைகெடச் செய்தவன் விண்தோய்
        கயிலை மயிலனையாய்

___________________________________________________________

காத்துச் சிறந்து நின்றேமுக்கு-தினையை வித்தி அதனைக் காத்து உள்ளம் மலிந்து நின்ற எங்களுக்கு; சென்று சென்று வினைவித்திக் காத்து விளைவு உண்டதாகி விளைந்தது-அத்தினையை வித்திக் காத்த காவல் போய்த் தீவினையை வித்தி அதனைக் காத்து அதன் விளைவையுமுண்டதாகி முடிந்தது எ-று.

    நினைவித்துத் தன்னை யென்னெஞ்சத்திருந்தென்பதற்கு ஒரு காற்றன்னை நினைவேனாகவுஞ் செய்து அந்நினைவே பற்றுக் கோடாகத் தான் புகுந்திருந்தெனினுமமையும். பொருப்பன் விருப்பென்பதனை நீர் வேட்கை போலக் கொள்க. தினை வித்தியஞான்று இத்தினைக்காவல் தலைக்கீடாக அவனை யெதிர்ப்படலாமென்று மகிழ்ந்து அதற்குடம்பட்டா- ராகலிற் றாம்வித்தினார்போலக் கூறினாள். புனத்தோடுதளர்வுற்று- புனத்தாற்றளர்வுற்று.

140

13.26.  நீங்குகஇனி நெடுந்தகையென
      வேங்கைமேல் வைத்துவிளம்பியது.


   
இதன் பொருள்: கனை கடற் செய்த நஞ்சு உண்டு - ஒலியா நின்ற கடலின்க ணுண்டாக்கப்பட்ட நஞ்சை யுண்டுவைத்து; அம்பலத்துக்