பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
342

New Page 1

இரவுக் குறி

    வெற்பகச் சோலையின் வேய்வளர்
        தீச்சென்று விண்ணினின்ற
    கற்பகச் சோலை கதுவுங்கல்
        நாடஇக் கல்லதரே.

168

14.22 ஆற்றாதுரைத்தல்

   
ஆற்றாதுரைத்தல் என்பது வரைவுகடாவி வரவுவிலக்கின தோழிக்கு வரைவுடம்படாது, பின்னுங் களவொழுக்கம் வேண்டி, யான் முன்செய்த தவப்பயனால் எனக்கெய்தலாம் வண்ணந் திருமக ளிவ்வாறு கொடிச்சியாயிருந்தாளெனக் கருதியே எனதின்னுயிர் நிற்பது; இத்தன்மையாளை யான் வரையுந் துணையெளியளாக நீ கூறுகின்ற தென்னெனத் தலைமகன் றனதாற்றாமை தோன்றக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

169. பைவா யரவரை அம்பலத்
        தெம்பரன் பைங்கயிலைச்
    செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத்
        தோட்சிற் றிடைக்கொடியை

_____________________________________________________________

யுரைப்பினுமமையும். வேயிற்பிறந்ததீ ஆண்டடங்காது சென்று தேவருலகத்தினின்ற கற்பகச்சோலையைக் கதுவினாற்போல, நின்வரவினால் அயலாரிடத்துப்பிறந்த அலர்பெருகி நின்னூருமறியப் பரந்து நின்பெருமையைச் சிதைக்குமென உள்ளுறை வகையான் அலரறி வுறுத்தவாறு கண்டுகொள்க. இவனுக்குப் பெருமையாவது இவன் வழியிற் பிதிர்கள் கொண்டாட்டம். சிதைத்தலாவது இகலோக பரலோக மிரண்டையுஞ் சிதைத்தல். மூங்கிலிற்பிறந்ததீத் தன்னையுஞ் சுட்டுத் தன்னுடைய சுற்றத்தையுஞ் சுட்டுக் கற்பகச் சோலையைக் கதுவினாற்போல வென்க. நற்பகற் சோமன் விகார வகையான் வலிந்து நின்றது. மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரவுவிலக்கி வரைவு கடாதல்.

168

14.22.  வரைவு கடாய வாணுதற் றோழிக்
      கருவரை நாடன் ஆற்றா துரைத்தது.


   
இதன் பொருள்: பை வாய் அரவு அரை-படத்தையும் பெரிய வாயையுமுடைய அரவையணிந்த வரையையுடைய; அம்பலத்து