New Page 1
இரவுக் குறி
மொய்வார்
கமலத்து முற்றிழை
யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப
தென்றுமென் இன்னுயிரே.
169
______________________________________________________________
எம்பரன் பைங் கயிலை - அம்பலத்தின்கணுளனாகிய
எம்முடைய பரனது சோலையாற் பசிய கயிலைக்கணுளளாகிய; செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்
சிற்றிடைக்கொடியை - செய்ய வாயையுங் கரிய கண்ணையும் பெரியபணை போலுந் தோள்களையுஞ் சிறியவிடையையுமுடைய
கொடிபோல்வாளை; மொய்வார் கமலத்து முற்றிழை - பெரியதாகிய தாளானெடிய கமலத்துவாழுந் திருமகளாகிய
முற்றிழை; முன்னை என் தவத்தால் - முற்பிறப்பின்கணுண்டாகிய எனது தவப்பயனால்; இன்று இவ்வாறு
இருக்கும் என்றே-எனக்கெய்தலாம்வண்ணம் இன்றிவ்வாறு கொடிச்சியா யிருக்குமென்று கருதியே; என்
இன் உயிர் என்றும் நிற்பது - என்னின்னுயிர் என்றும் நிற்பது; இத்தன்மையாளை யான்வரையுந் துணை
யெளியளாக நீ கூறுகின்றதென்! எ-று.
எம்பரனென்பதற்கு முன்னுரைத்ததுரைக்க.
(தி.8 கோவை பா. 99) கயிலைக் கொடியெனவியையும். கொடியை யென்னுமிரண்டாவது என்று கருதியென வெஞ்சிநின்ற
வினையொடு முடியும். மெய்ப்பாடு: உவகை. பயன்: வரைவுடம்படாமை.
169
|