பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
486

New Page 1

வரை பொருட் பிரிதல்

    மேலன் புகுந்தென்கண் நின்றா
        னிருந்தவெண் காடனைய
    பாலன் புகுந்திப் பரிசினின்
        நிற்பித்த பண்பினுக்கே.

286

18.22 இன்னலெய்தல்

   
இன்னலெய்தல் என்பது வெறியாடுதற்குத் தாயர் வேலனை யழைப்பக் கேட்ட தலைமகள், இருவாற்றானும் நமக்குயிர்வாழு நெறியில்லையெனத் தன்னுள்ளே கூறி, இன்ன லெய்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

287. அயர்ந்தும் வெறிமறி ஆவி
        செகுத்தும் விளர்ப்பயலார்
    பெயர்ந்தும் ஒழியா விடினென்னை
        பேசுவ பேர்ந்திருவர்

____________________________________________________________

நின்றது. ஏழாவதற்கு இன்னென்பதோருருபு புறனடையாற் கொள்ளினுமமையும். மெய்ப் பாடு: இளி வரல.் பயன்: தலைமகளது வேறுபாடு நீக்குதல்.

286

18.22.  ஆடிய வெறியிற் கூடுவ தறியாது
       நன்னறுங் கோதை இன்ன லெய்தியது.


   
இதன் பொருள்: வெறி அயர்ந்தும் மறி ஆவி செகுத்தும் பெயர்ந்தும் விளர்ப்பு ஒழியாவிடின்-வெறியை விரும்பியாடியும் மறியின தாவியைக்கெடுத்தும் பின்னு நிறவேறுபா டொழியா தாயின்; அயலார் பேசுவ என்னை-அயலார் கூறுவனவென்னாம்; பிறிதின் ஒழியின்-வெறியாட்டாகிய பிறிதினால் இவ்விளர்ப் பொழியுமாயின்; துயர்ந்தும் துறைவனுக்கு என் ஆதும்-துயர முற்றும் அத்துறைவனுக்கு நாமென்னாதும்! இருவாற்றானு முயிர்வாழ்த லரிது எ-று.

   
இருவர் பேர்ந்து உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் துயர்ந்தும்-யான்றலைவன் யான்றலைவனென்று தம்முண் மாறுபட்ட பிரமனு மாலுமாகிய விருவர் அந்நிலைமை யினின்றும் பெயர்ந்து தழற் பிழம்பாகிய தன்வடிவை யறியலுற்று ஆகாயத்தின் மேற் சென்றுயர்ந்தும் நிலத்தின்கிழ்ப்புக்குத் தாழ்ந்தும்