புதல
பரத்தையிற்
பிரிவு
புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல்
கலவியிடத் தூடன் முன்னிகழ்
வுரைத்தல்
பரத்தையைக் கண்டமை பயன்படக்
கூற
லூதிய மெடுத்துரைத் தூட றீர்த்த
லெண்ணா றொன்றிவை பரத்தையிற்
பிரிவெனப்
பண்ணார் மொழியாய் பகர்ந்திசி
னோரே.
25.1 கண்டவர் கூறல்
கண்டவர் கூறல் என்பது தலைமகன்
பரத்தையர் சேரிக்கட் செல்லாநிற்ப, அப்பரத்தையர் அவனை ஒருங்கெதிர்கொண்டு சுற்றும்பற்றிப்
போர்செய்யா நின்றமையின், இஃதிவன் காதலிமாட் டென்னாமென அவ்விடத்துக் கண்டவர் தம்முட்
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
352. உடுத்தணி வாளர வன்தில்லை
யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை
யார்ப்ப இளமயிலேர்
______________________________________________________________
செல்லத்தணிந்தமை கூறல், ஊடறணிவித்தல்,
அணைந்தவழியூடல், புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல், கலவிகருதிப்புலத்தல், மிகுத்துரைத்தூடல்,
ஊடனீடவாடி யுரைத்தல், துனியொழிந் துரைத்தல், புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல், கலவியிடத்
தூடல், முன்னிகழ்வுரைத் தூடறீர்த்தல், பரத்தையைக்கண்டமை கூறிப்புலத்தல், ஊதிய மெடுத்துரைத்
தூடறீர்த்தல் என விவை நாற்பத்தொன்பதும் பரத்தையிற் பிரிவாம் என்றவாறு. அவற்றுள்-
25.1. உரத்தகு வேலோன் பரத்தையிற்
பிரியத்
திண்டேர் வீதியிற் கண்டோ
ருரைத்தது.
இதன் பொருள்: உடுத்து
அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர-கச்சாகவும் உடுத்து அணியாகவுமணிந்த வாளரவையுடையவனது தில்லைக்கணுளனாகிய
வூரண் இவ்வீதிக்கண்வர; எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப - தெரிந்தணியப்பட்ட கைக்கணுளவாகிய
இனவளைகளொலிப்ப; இள மயில் ஏர் கடுத்து-
|