பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
568

பரத்தையிற் பிரிவு

    மனைபுகல் கண்ட வாயிலவர் கூறன்
    முகமலர்ச்சி கூறன் முனிவ தென்னெனக்
    காலநிகழ் வுரைத்தல் கலவி யெய்தலை
    யெடுத்துரைத் தல்லொடு கலவி கருதிப்
    புலத்தல் குறிப்பறிந்து புலந்தமை கூறல்
    வாயிலவர் வாழ்த்தல் புனல்வர வுரைத்த
    றேர்கண்டு மகிழ்தல் சேடியர் விழவிற்
    றம்மு ளுரைத்த றன்னை வியத்த
    னகைத்துரைத் தல்லொடு நாண்கண்டுரைத்தல்
    பாணன்வர வுரைத்தல் பாங்கியியற் பழித்த
    லுழையரியற் பழித்த லொண்ணுத லாளவற்
    கியற்பட மொழித லியல்புநினைந் துரைத்தல்
    வாயில் பெறாது மகன்றிற நினைதல்
    வாயிற்க ணின்று தோழிக் குரைத்தல்
    வாயில் வேண்டத் தோழி கூறன்
    மன்னிய தோழி வாயில் வேண்டன்
    மனையவர் மகிழ்தல் வாயின் மறுத்தல்
    பாணனொடு வெகுடல் பாணன் புலத்தல்
    விருந்தொடு செல்லத் தணிந்தமை கூற
    லூட றணிவித்த லணைந்தவழி யூடல்
    புனலாட்டு வித்தமை கூறிப் புலத்தல்
    கலவி கருதிப் புலவி புகறன்
    மிகுத்துரைத் தூடல் விறல்வேற் காளை
    யூட னீட வாடி யுரைத்த
    றுனியொழிந் துரைத்த றுகளொன் றில்லாப்

______________________________________________________________

கூறல், வாயிலவர் வாழ்த்தல், புனல் வரவு உணர்த்தல், தேர்வரவு கண்டு மகிழ்ந்து கூறல், புனல்விளையாட்டிற்றம்முளுரைத்தல், தன்னை வியந்துரைத்தல், நகைத்துரைத்தல், நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல், பாணன்வரவுரைத்தல், தோழியியற்பழித்தல், உழையரியற்பழித்தல், இயற்படமொழிதல், நினைந்து வியந்துரைத்தல், வாயில்பெறாது மகன்றிறநினைதல், வாயிற்கணின்று தோழிக் குரைத்தல், வாயில் வேண்டத் தோழி கூறல், தோழி வாயில் வேண்டல், மனையவர் மகிழ்தல், வாயில் மறுத்துரைத்தல், பாணனொடு வெகுடல், பாணன்புலந்துரைத்தல், விருந்தொடு