பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
567

25

25. பரத்தையிற் பிரிவு

இனிப்பரத்தையிற் பிரிதல் என்பது தலைமகளை வரைந்தெய்திய பின்னர், வைகலும் பாலேநுகர்வானொருவன் இடையே புளிங்காடியுநுகர்ந்து அதனினிமை யறிந்தாற்போல அவணு கர்ச்சி யினிமை யறிதற்குப் புறப்பெண்டீர்மாட்டுப் பிரியாநிற்றல். அல்லதூஉம், பண்ணும்பாடலு முதலாயின காட்டிப் புறப்பெண்டீர் தன்னைக் காதலித்தாற் றானெல்லார்க்குந் தலைவனாகலின் அவர்க்கு மின்பஞ் செய்யப் பிரியாநிற்றலென்றுமாம். இவ்வாறொழிந்து தனக் கின்பம்வேண்டிப் பிரிவனாயின்,

    கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
    மொண்டொடி கண்ணே யுள.

(குறள். 1101) என்பதனால் இவளுக்குத் தலைமகளென்னும் பெயரோடு மாறுபட்டுத் தனது பெருமையோடு மாறுபடா நிற்கும். அது வருமாறு-

    கண்டவர் கூறல் காதற் றோழி
    பொறையுவந் துரைத்தல் பொதுப்படக் கூறி
    வாடி யழுங்கன் மாறுகொண் டவனொடு
    கனவிழந் துரைத்தல் விளக்கொடு வெறுத்தல்
    வாரம் பகர்ந்து வாயின் மறுத்தல்
    பள்ளியிடத் தூடல் பணிமொழி யாடன்
    செவ்வணி விடுக்க வில்லோர் கூற
    லயலறி வுரைத்தவ ளழுக்க மெய்தல்
    செவ்வணி கண்ட வாயிலவர் கூறன்

______________________________________________________________

    பரத்தையிற் பிரிவு - இதன் பொருள்: கண்டவர் கூறல், பொறையு வந்துரைத்தல், பொதுப்படக்கூறி வாடியழுங்கல், கனவிழந்துரைத்தல், விளக்கொடு. வெறுத்தல், வாரம்பகர்ந்து வாயின்மறுத்துரைத்தல், பள்ளியிடத்தூடல், செவ்வணிவிடுக்கவில்லோர்கூறல், அயலறிவுரை த்தவளழுக்க மெய்தல், செவ்வணிகண்ட வாயிலவர் கூறல், மனை புகல்கண்ட வாயிலவர் கூறல், முகமலர்ச்சி கூறல், கால நிகழ்வுரைத்தல், எய்தலெடுத்துரைத்தல், கலவிகருதிப்புலத்தல், குறிப்பறிந்து புலந்தமை