பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
571

25

பரத்தையிற் பிரிவு

25.2 பொறையுவந்துரைத்தல்

   
பொறையுவந்துரைத்தல் என்பது தலைமகனைப் பரத்தையரெதிர் கொண்டமை கேட்ட தலைமகள் நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாமற் பொறுத்தமை கண்ட தோழி, யானிவ்வாறாகவும் கலங்காது நின்ற பெரும்பொறையாட்டியை யான் இன்று பேசுவன என்னென்று அவளையுவந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

353. சுரும்புறு கொன்றையன் தொல்புலி
        யூர்ச்சுருங் கும்மருங்குற்
    பெரும்பொறை யாட்டியை யென்இன்று
        பேசுவ பேரொலிநீர்க்
    கரும்புறை யூரன் கலந்தகன்
        றானென்று கண்மணியும்
    அரும்பொறை யாகுமென் னாவியுந்
        தேற்வுற் றழிகின்றதே.

353

__________________________________________________

25.2.  கள்ளவிழ் கோதையைக் காதற் றோழி
      உள்ளவிழ் பொறைகண் டுவந்து ரைத்தது.


   
இதன் பொருள்: பேரொலி நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று - பெரிய வொலிக்கு நீரையுடைய கரும்புதங்கு மூரை யுடையவன் கலந்துவைத்து நீங்கினானென்று கருதுதலான்; கண்மணியும் அரும் பொறை ஆகும் - எண்கண்மணியும் பயனின்மை யாற் றாங்குதற்கரிய பாரமாகாநின்றன; என்ஆவியும் தேய்வுற்று அழிகின்றது - எனதுயிருந் தேய்ந்தழியா நின்றது; பெரும் பொறை யாட்டியை என் இன்று பேசுவ-யானிவ்வாறாகவுங் கலங்காது நின்ற பெரும்பொறையையுடையவளை யான் இன்று பேசுவனவென்! எ-று.

    சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர்ச் சுருங்கும் மருங்குல் பெரும் பொறையாட்டியை - சுரும்புகள் வாழுங் கொன்றைப் பூவினை யுடையானது பழையதாகிய புலியூரிற் சுருங்கின மருங்குலையுடைய பெரும்பொறையாட்டியையெனக் கூட்டுக.

    என் கண்மணியுந் தேய்வுற்றழியாநின்றது ஆவியுமரும்