பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
572

25

பரத்தையிற் பிரிவு

25.3 பொதுப்படக்கூறி வாடியழுங்கல்

   
பொதுப்படக் கூறி வாடியழுங்கல் என்பது பொறையு வந்துரைத்த தோழிக்கு, முன்னிலைப்புறமொழியாக, தமதுநலங்கவரக்கொடுத்து வேறுதுணை யின்மையிற் றம தணையையே தமக்குத் துணையாகக்கொண்டு கிடந்து என்னைப்போல வுயிர்தேய்வார் இனியாவரோவெனப் பொதுப்படப் பரத்தையர்க் கிரங்குவாள் போன்று, தலைமகனது கொடுமைநினைந்து வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-

354. அப்புற்ற சென்னியன் தில்லை
        யுறாரி னவர்உறுநோய்
    ஒப்புற் றெழில்நல மூரன்
        கவரஉள் ளும்புறம்பும்
    வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம்
        மெல்லணை யேதுணையாச்
    செப்புற்ற கொங்கையர் யாவர்கொ
        லாருயிர் தேய்பவரே.

354

______________________________________________________________

பொறையாகாநின்ற தென்று கூட்டுவாருமுளர். உள்ளவிழ் பொறை-நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாத பொறை. மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த வுவகை. பயன்: தலை மகளைவியத்தல்.

353

25.3.  பொற்றிக ழரவன் மற்றிகழ் தில்லைப்
      பிரிந்த வூரனோ டிருந்துவா டியது.


   
இதன் பொருள்: அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் - நீரடைந்த சென்னியையுடையவனது தில்லையை மனமொழி மெய்களாலணுகா தாரைப்போல; எழில் நலம் ஊரன் கவர - கண்ணோட்டமின்றி எழிலையுடைய நலத்தை ஊரன் கவர்ந்து கொள்ள; அவர் உறுநோய் ஒப்புற்று உள்ளும் புறம்பும் வெப்புற்று - அத் தில்லையை யுறாதாருறுநோயையொத்து அகத்தும் புறத்தும் வெப்பத்தையுற்று; வெய்துயிர்ப்புற்று - வெய்தாகவுயிர்த் தலையுற்று; தம் மெல் அணையே துணையா - வேறு துணையின்மையிற்றமது மெல்லணையே தமக்குத் துணையாக; செப்பு உற்ற கொங்கையர் ஆருயிர் தேய்பவர் யாவர் கொல் -செப்புப்போலுங் கொங்கையை யுடைய மகளிர் ஆருயிர் தேய்வார் பிறர் யாரோ யானல்லது? எ-று.

    இத்தன்மையராய் என் போல இனி யாருயிர்தேய்வார்