பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
573

25

பரத்தையிற் பிரிவு

25.4 கனவிழந்துரைத்தல்

   
கனவிழந்துரைத்தல் என்பது தலைமகனது கொடுமை நினைந்து கிடந்து வாடாநின்ற தலைமகள், கனவிடைவந்து அவன் மார்புதரத்தானதனை நனவென்று மயங்கிப் புலந்து அவனோடு புணராதிழந்தமையைத் தோழிக்குச் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-

355. தேவா சுரரிறைஞ் சுங்கழ
        லோன்தில்லை சேரலர்போல்
    ஆவா கனவும் இழந்தேன்
        நனவென் றமளியின்மேற்
    பூவார் அகலம்வந் தூரன்
        தரப்புலம் பாய்நலம்பாய்
    பாவாய் தழுவிற் றிலேன்விழித்
        தேனரும் பாவியனே.

355

__________________________________________________________

யாரோவெனப் பரத்தையர்க்கிரங்குவாள்போன்று, தலைமகனது கொடுமை கூறினாளாகவுரைக்க. தில்லை யுறாதவருறு நோயென்பது பாட மாயின், எழினலமூரன்கவரத் தில்லையையுறாத அத்தீவினை யாருறு நோயையொத்தென்றுரைக்க. ஊரனோடிருந்து வாடியது - ஊரன் குறைகளை நினைந்து அதனோடிருந்து வாடியது. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

354

25.4.  சினவிற் றடக்கைத் தீம்புன லூரனைக்
      கனவிற் கண்ட காரிகை யுரைத்தது.


   
இதன் பொருள்: நலம் பாய் பாவாய் - நலம் பரந்த பாவாய்; அமளியின் மேல் பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர - அமளியின் கண்மாலையையுடைய மார்பை ஊரன்வந்துதர; புலம்பாய் - அவனோடு மேவாமையிற் பின்னுந்தனிமையாய்; நனவு என்று தழுவிற்றிலேன் -நனவென்று மயங்கித் தவறுநினைந்து புல்லிற்றிலேன்; அரும் பாவியேன் விழித்தேன் - அத்துணையேயன்றிப் பொறுத்தற்கரிய தீவினையையுடையேன் விழிப்பதுஞ் செய்தேன், அதனால், தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் - தேவருமசுரரு மிறைஞ்சுங் கழலையுடையவனது தில்லையைச் சேராதாரைப்போல; ஆவா கனவும் இழந்தேன் -ஐயோ! கனவான்