பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
574

25

பரத்தையிற் பிரிவு

25.5 விளக்கொடுவெறுத்தல்

   
விளக்கொடு வெறுத்தல் என்பது கனவிழந்தமை கூறி வருந்தாநின்ற தலைமகள், நீயாயினுங் கலந்தவர்க்குப் பொய்ம் முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்றென்றிலையேயென விளக்கொடு வெறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

356. செய்ம்முக நீல மலர்தில்லைச்
        சிற்றம் பலத்தரற்குக்
    கைம்முகங் கூம்பக் கழல்பணி
        யாரிற் கலந்தவர்க்குப்
    பொய்ம்முகங் காட்டிக் கரத்தல்
        பொருத்தமன் றென்றிலையே
    நெய்ம்முக மாந்தி இருள்முகங்
        கீழும் நெடுஞ்சுடரே.

356

___________________________________________________________

வரு மின்பத்தையு மிழந்தேன் எ-று.

    தில்லைசேரலர்போ லென்புழி ஒத்தபண்பு துன்பமுறுதலும் இன்பமிழத்தலுமாம்.

355

25.5.  பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
      அன்பனோ டழுங்கிச் செஞ்சுடர்க் குரைத்தது.


   
இதன் பொருள்: நெய்ம்முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடுஞ்சுடரே - நெய்ம்முகத்தைப் பருகி இருண்முகத்தைக் கிழிக்கும் நெடியசுடரே; கலந்தவர்க்குப் பொய்ம் முகம் காட்டிக் கரத்தல் பொருத்தம் அன்று என்றிலை - எம்மைக்கலந்தவர்க்குப் பொய்யையுடைய முகத்தைக் காட்டித் தெளிந்தாரை வஞ்சித்தல் தகுதியன்றென்று கூறிற்றிலையே? வேறு கூறுவார் யாவர்? எ-று.

    செய்ம்முகம் நீலம் மலர் தில்லைச் சிற்றம்பலத்து அரற்கு-செய்ம்முகத்துளவாகிய நீலப்பூ மலராநின்ற தில்லையிற் சிற்றம்பலத்தின் கணுளனாகிய அரனுக்கு; கைம்முகம் கூம்பக் கழல் பணியாரின் கரத்தல்-கைம்முகங் குவியக் கழலைப்பணியாதாரைப் போலக் கண்ணோட்டமும் மெய்ம்மை யுமின்றிக் கரத்தலெனக் கூட்டுக.

   
செய்ம்முகம் - செய்ம்முன், கைம்முகம் - கைத்தலம். கரத்தல்-