| த 
பரத்தையிற்
பிரிவு 
    தாரணி கொன்றையன் தக்கோர்தஞ்சங்க நிதிவிதிசேர்
 ஊருணி உற்றவர்க் கூரன்மற்
 றியாவர்க்கும் ஊதியமே.
 
400 
_______________________________________________________________ 
வானுங் கெழுதகைமையானும் பாணர்க்கு
அவர் சுற்றத்தோடொக்கும்; சீர் அணி சிந்தாமணி - நினைத்ததுகொடுத்தலிற் சீரையுடைய நல்ல
சிந்தாமணியோடொக்கும்; அணி தில்லைச் சிவனடிக்குத் தார் அணி கொன்றையன் - அழகிய தில்லைக்கட்
சிவனது திருவடிக்குத் தாராகி அவனாலணியப்படுங் கொன்றைப் பூவின்றன்மையையுடையன்; தக்கோர்தம்
சங்கநிதி - சான்றோர் தமக்குத் தொலையாத நிதியாயிருத்தலிற் சங்கநிதியோடொக்கும்; விதி
- நாட்டார்க்கும் பகைவர்க்குந் தப்பாது பயன்கொடுத்தலின் விதியொடொக்கும்; உற்றவர்க்குச்
சேர் ஊருணி-சுற்றத்தார்க்கு அவர்வேண்டிய செய்ய விருத்தலின் அணித்தாகிய வூருணியோ டொக்கும்;
யாவர்க்கும் ஊதியம் - அதனான் வரைவின்றி எல்லார்க்கும் இவன் பெறும் பயன் எ-று.
 தாரணிகொன்றையனென்பது குரங்கனென்பதுபோல
உவமைப் பொருட்பட நின்றதெனினுமமையும். விதிசேரூருணி யென்பதற்கு முறைமையாற் சேரப்படுமூருணி யெனினுமமையும்.
தக்கார்க்குஞ் சுற்றத்தார்க்குங் கொடுத்தல் வண்மையன்மையின் அவரை வேறுபிரித்துக் கூறினாள்.
ஊடறீர்ந்து கூடியவழித் தலை மகட்கு உண்ணின்றசிவப்பு ஒருகாரணத்தாற் சிறிது புலப்பட, ஊரன் யாவர்க்கு
மூதியமாகலின் அன்பானன்றி அருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்யுமன்றே; அதனான் நீ புலக்கற்
பாலையல்லையென்று குறிப்பினாற் றோழி சிவப்பாற்று வித்தது. மெய்ப்பாடு: உவகை. பயன்: மெய்ம்மகிழ்தல்.
 
 இவ்வகை கூத்தர் மகிழ்ந்து இன்னபோல்வன
தலைமகன் குணங்களைப் பாராட்டினாரென்பது. என்னை? ”தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும் -
பல்லாற் றானு மூடலிற் றணித்தலு - முறுதி காட்டலு மறியுமெய்ந் நிறுத்தலு - மேதுவிலுணர்த் தலுந் துணியக்
காட்டலு -மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன” (தொல். பொருள் கற்பு - 27) என்றார் தொல்காப்பியனார்.
இப்பாட்டு ஐவகைத் திணைக்கும் உரித்தாகலிற் பொதுவகைத்தென்ப பெறுமென்பது.
 
400 
பரத்தையிற்பிரிவி முற்றிற்று. 
திருக்கோவையாருரை முற்றுப்பெற்றது. 
திருச்சிற்றம்பலம் |