பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
627

New Page 1

பரத்தையிற் பிரிவு

    மெய்யுற வாம்இதுன் னில்லே
        வருகெனவெள்கிச்சென்றாள்
    கையுறு மான்மறி யோன்புலி
        யூரன்ன காரிகையே.

399

25.49 ஊதியமெடுத்துரைத் தூடறீர்த்தல்

   
ஊதியமெடுத்துரைத்தூடறீர்த்தல் என்பது பரத்தையைக் கண்டமைகூறிப் புலந்து வேறுபட்ட தலைமகளுக்கு, இத்தன்மையனாய் யாவர்க்கு மூதியமாகலின், அன்பானன்றியருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்ய வேண்டுமன்றே; புறப்பெண்டீரைப் போல யாமவனோடு புலக்கற்பாலேமல்லேம்; அவன் வரும்பொழுது எதிர்தொழுதும் போம்பொழுது புறந்தொழுதும், புதல்வனைப் பயந்திருக்கையன்றோ நமக்குக் கடனாவதெனத் தோழி தலைமகன தூதிய மெடுத்துரைத்து அவளையூடறீர்த்து, அவனோடு பொருந்தப் பண்ணாநிற்றல். அதற்குச் செய்யுள்-

400. காரணி கற்பகங் கற்றவர்
        நற்றுணை பாணரொக்கல்
    சீரணி சிந்தா மணியணி
        தில்லைச் சிவனடிக்குத்

_________________________________________________

ஐயுறவாகவெனத் திரித்துக்கொள்க. அரத்தகு நெடுவே லென்பது பாடமாயின், அரத்தொழிலாற்றக்க நெடுவேலெனவுரைக்க. மெய்ப்பாடு: நகை. பயன்: சிவப்பாற்றுதல். ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் தலைமகளைச் சிவப்பாற்றுவிப்பான் நின்னின் வேறுசிலரெனக் கில்லையால் நீ வெகுளற்க வென்றாற்குத் தலைமகளிவ்வகை சொன்னாளென்பது.

399

25.49.  இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
       விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.

   
இதன் பொருள்: ஊரன் கார் - ஊரன்வேண்டாமைக் கொடுத்தலிற் காரோடொக்கும்; அணி கற்பகம் - வேண்டக் கொடுத்தலின் அழகிய கற்பகத்தோடொக்கும்; கற்றவர் நல்துணை - நுண்ணிய கல்வியனா கலிற் கற்றவர்க்கு நல்லவுசாத் துணை; பாணர் ஒக்கல் - இசையுணர்