பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
626

25

பரத்தையிற் பிரிவு

25.48 பரத்தையைக் கண்டமைகூறிப் புலத்தல்

   
பரத்தையைக்கண்டமைகூறிப் புலத்தல் என்பது முன்னிகழ்வுரைத் தூடறீர்த்து இன்புறப்புணரப்பட்ட தலைமகள் பிறர்க்கும் நீ இவ்வாறின்பஞ் செய்தியென்றுகூற, நின்னையொழிய யான் வேறொருத்தியையு மறியேனென்ற தலைமகனுக்கு நின்பரத்தை போகாநின்றவள் நம்வாயிற்கணின்று தேருருட்டி விளையாடா நின்ற புதல்வனைக் கண்டு நின்மகனென்றையுற்றுத் தழுவ, நீயையுற வேண்டா; அவன் உன்மகன்; உறவு மெய்யாகிய வுறவே; ஈதும் உனதில்லமே; ஈண்டுவருவாயாகவென்றியான்கூற, அது கேட்டுத் தானாணிப் போயினாள்; யானவளை யறியேனாக நீ மாயம் கூற வேண்டுவதில்லை யெனத் தான் பரத்தையைக் கண்டமை கூறிப் பின்னு மவனொடு புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

399. ஐயுற வாய்நம் அகன்கடைக்
        கண்டுவண் டேருருட்டும்
    மையுறு வாட்கண் மழவைத்
        தழுவமற் றுன்மகனே.

______________________________________________________________

பயன்: தலைமகளை மகிழ்வித்தல். 

398

25.48.  பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
      அரத்த நெடுவேல் அண்ணற் குரைத்தது.


   
இதன் பொருள்: நம் அகன் கடைக் கண்டு ஐயுறவாய் - நமதகன்ற கடைக்கட் கண்டு நின்மகனென்றையுற்று; வள் தேர் உருட்டும் மை உறு வாள் கண் மழவைத் தழுவ - வளவிய சிறு தேரையுருட்டும் மையுற்ற வாட்கண்ணையுடைய புதல்வனைத் தான்வந்துதழுவ, அதனைக் கண்டு; உன் மகனே - அவன் உன் மகனே; மெய் உறவாம் - உறவு மெய்யாகிய வுறவே; இது உன் இல்லே - இதுவும் நினதில்லமே; வருகென - ஈண்டு வருவாயாக வென் றியான்கூற; கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகை -கையைப் பொருந்திய மான்மறியையுடையவனது புலியூரைப் போலுங் காரிகை; வெள்கிச் சென்றாள் - நாணிப்பெயர்ந்தாள்; அதனான், யானவளை யறியாதேனாக நீ நினைத்து மாயங் கூறவேண்டுவதில்லை எ-று.