ந
பரத்தையிற்
பிரிவு
நீறூர் கொடுநெறி சென்றிச்
செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
கங்குற் சிறிதுயிலே.
398
______________________________________________________________
வெதுப்பு நீறு ஊர் கொடு நெறி சென்று
- ஞாயிற்றினுடைய வளவிய கதிர்கள் வெதுப்பிய நீறுபரந்த கொடியநெறியைச் சென்று; இச் செறிமென்முலை
நெருங்க - இச்செறிந்த மெல்லிய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்தடர; சீறூர் மரை அதளின்
தங்கு கங்குல் சிறுதுயில் மாறு கண்டிலம் - நெறியாற் சிறிய வூரின்கண் மரையதட் பள்ளியிற்றங்கிய
இரவிற் சிறிய துயிற்குமாறு கண்டிலம்; அதனை நீ யுள்ளியுமறிதியோ? எ-று.
அண்டரதண்டமுழுதும் பெறுதலால்
வருமின்பமும் அத்துயிலான்வந்த வின்பத்திற்கு மாறில்லையென்ற வாறு. இளவேறு - புதல்வன். தமக்குத்தக்க
பள்ளியுமிடமு மின்மையிற் சிறுதுயிலென்றான். துயிலும்பொழுதிற்றுயிலாப் பொழுது பெரிதாகலின் அவ்வாறு
கூறினானெனினுமமையும். துயிற்கென்னு நான்கனுருபு விகாரவகை யாற்றொக்கு நின்றது. முன்னிகழ்ந்தது
கூறுவானாய் உண்ணின்ற சிவப்பாற்று வித்தது. ஞெமுங்க வென்பதூஉம், மரவத ளென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை.
|