உ
பரத்தையிற்
பிரிவு
உலைமலி வேற்படை யூரனிற்
கள்வரில் என்னவுன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த
மாலை கலுழ்ந்தனவே.
397
25.47 முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல்
முன்னிகழ்வுரைத்தூடறீர்த்தல் என்பது
கலவியிடத்தூடா நின்ற தலைமகளுக்கு, யாங்கொடிய நெறியைச் சென்று சிறியவூரின்கண் மரையதட்பள்ளியின்
இச்செறிந்த மெல்லிய முலைகள் என்மார்பிடை வந்தடர்க்கத் தங்கிய சிறிய துயிற்கு மாறுகண்டிலம்;
அதனை நீ யுள்ளியுமறிதியோவென முன்னிகழ்வுரைத்துத் தலைமகன் அவளை யூடறீராநிற்றல். அதற்குச் செய்யுள்-
398. ஆறூர் சடைமுடி அம்பலத்
தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
டிலம்வண் கதிர்வெதுப்பு
_________________________________________________________
வாயிலாகப் புக்க தலைமகனை யேற்றுக்கொண்டு
பள்ளியிடத்தாளாக மேற்சொன்ன வகையே உண்ணின்றெழுந்த பொறாமை காரணம் பெற்றுத் தோன்றியது;
தோன்றத் தலைமகன் ஆற்றானாயின் அவ்வாற்றாமை கண்டு சிவப்பாற்றுவித்தல். தலைமகளிடத்தும்
தலை மகனிடத்தும் இவ்வகை நிகழ்ந்தது கண்டு தோழியிது சொன்னாளென்பது. தலைமகன்றான் சொன்னா
னெனினுமமையும். என்னை? ”மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு-நினையுங் காலைப் புலவியுளுரிய” (தொல்.
பொருளியல். 31) என்றார் தொல்காப்பியனார். தலைமகளவ்வகை செய்யவும் பெறுமென்பது.
397
25.47. முன்னி கழ்ந்தது நன்னுதற்
குரைத்து
மன்னு புனலூ ரன்மகிழ் வுற்றது.
இதன் பொருள்: ஊர்
மழ விடையாய் - தவழாநின்ற இளைய வேற்யையுடையாய்;ஆறு ஊர் சடைமுடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்
- ஆறுபரந்த சடைமுடியையுடைய அம்பலத்தின் கணுளராகிய அண்டரதண்டமுழுதையும் யாம் பெறினும்; வண்கதிர்
|