ம
பரத்தையிற்
பிரிவு
மதுத்தங் கியகொன்றை வார்சடை
யீசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந்
தோபுதல்வா
எம்மைப் பூசிப்பதே.
396
25.46 கலவியிடத்தூடல்
கலவியிடத்தூடல் என்பது புதல்வனை
வாயிலாகப்புக்குப் புலவிதீர்த்துப் புணர்தலுறாநின்ற தலைமகனைத் தலைமகள் ஒரு காரணத்தால் வெகுண்டு,
அவன் மார்பகத்துதைப்ப, அவ்வெகுடல் தீர வேண்டி அவனவள்காலைத் தன்றலை மேலேற்றுக் கொள்ள,
அது குறையாக அவள் புலந்தழாநின்றமையை அவ்விடத்து உழையர் தம்முட்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
397. சிலைமலி வாணுத லெங்கைய
தாக மெனச்செழும்பூண்
மலைமலி மார்பி னுதைப்பத்தந்
தான்றலை மன்னர்தில்லை
___________________________________________________________
25.46. சீறடிக் குடைந்த நாறிணர்த்
தாரவன்
தன்மை கண்டு பின்னுந் தளர்ந்தது.
இதன் பொருள்: மலை மலி
செழும் பூண்மார்பின் உதைப்ப - யான் வெகுண்டு மலைபோலும் வளவிய பூணையுடைய தன் மார்பகத்து மிதிப்ப;
சிலை மலி வாணுதல் எங்கையது ஆகம் எனத் தலை தந்தான் -அவ்வாகத்தைச் சிலைபோலும் வாணுதலையுடைய
எங்கையதென்றே கருதித் தன்சென்னியைத் தந்தனன்; அதனான், மன்னர் தில்லை உலை மலி வேற்படை
ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி - மன்னனது தில்லையில் உலையிடத்துண்டாகிய தொழிலான்
மிக்க வேலாகிய படையையுடைய வூரனைப்போலக் கள்வரில்லை யென்று கருதி; கலை மலி காரிகை கண் முத்த
மாலைகலுழ்ந்தன - மகளிர்க்குத்தக்க யாழ்முதலாகிய கலைகளான் மிக்க காரிகை நீர்மையையுடையாளுடைய
கண்கள் கண்ணீர்த் துளித் தாரையாகிய முத்தமாலையைப் பொருந்தின; அதனான், இவள் புலத்தற்குக்
காரணம் வேண்டுவ தில்லைபோலும் எ-று.
இதுவுந் துறைகூறிய கருத்து. மெய்ப்பாடு:
இளிவரலைச் சார்ந்த நகை. பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல். பிள்ளை
|