25
பரத்தையிற்
பிரிவு
25.45 புதல்வன்மேல்வைத்துப்
புலவிதீர்தல்
புதல்வன்மேல்வைத்துப் புலவிதீர்தல்
என்பது துனியொழித்துக்கூடிப் பிரிந்தவழிப் பின்னும் பரத்தைமாட்டுப் பிரிந்தானென்று கேட்டுப்
புலந்து வாயின்மறுக்க, வாயிற்கணின்று விளையாடாநின்ற புதல்வனை யெடுத்தணைத்துத் தம்பலமிட்டு முத்தங்கொடுத்து
அதுவாயிலாகக் கொண்டு தலைமகன் செல்லாநிற்ப, அப்புதல்வனை வாங்கி யணைத்துக் கொண்டு, அவன்
வாயிற்றம்பலந் தன்மெய்யிற் படுதலான் எல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்தோ
நீ யெம்மைக் கொண்டாடுவது? அதுகிடக்க, இதனை நினக்குத் தந்தவாறு சொல்லுவாயாகவெனப் புதல்வன்மேல்
வைத்துத் தலைமகள் புலவி தீராநிற்றல். அதற்குச் செய்யுள்-
396. கதிர்த்த நகைமன்னுஞ்
சிற்றவ்வை
மார்களைக் கண்பிழைப்பித்
தெதிர்த்தெங்கு நின்றெப்
பரிசளித்
தானிமை யோரிறைஞ்சும்
___________________________________________________________
25.45. புதல்வனது திறம்புகன்று
மதரரிக்கண்ணி வாட்டந்தவிர்ந்தது.
இதன் பொருள்: மதுத் தங்கிய
கொன்றை வார் சடை ஈசர் இமையோர் இறைஞ்சும் வள் தில்லை நல்லார் பொதுத் தம்பலம் கொணர்ந்தோ-தேன்றங்கிய
கொன்றைப்பூவையுடைய நீண்ட சடையையுடைய வீசரது இமையோரால் வணங்கப்படும் வளவிய தில்லையிலுளராகிய
நல்லா ரெல்லார்க்கும் பொதுவாகிய தம்பலத்தைக் கொண்டுவந்தோ; புதல்வா-புதல்வா; எம்மைப்
பூசிப்பது - நீ யெம்மைக்கொண்டாடுவது? அதுநிற்க, கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களைக்
கண் பிழைப்பித்து - இது நினக்குத் தருகின்றவிடத்து நின்றந்தை ஒளிவிட்ட முறுவல்பொருந்திய நின்
சிறிய வன்னைமாரைக் கண்ணைத்தப்புவித்து; எதிர்த்து எங்கு நின்று எப்பரிசு அளித்தான் - அவர்
காணாதவண்ணம் ஒருவாற்றானின்னை யெதிர்ப்பட்டு எவ்விடத்து நின்று எவ்வண்ணமிதனை நினக்குத் தந்தான்?
நீயிது சொல்ல வேண்டும் எ-று.
மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த
நகை. பயன்: ஊடனீங்குதல்.
396
|