புயன
பரத்தையிற்
பிரிவு
புயன்மன்னு குன்றிற்
பொருவேல்
துணையாப்பொம் மென்இருள்வாய்
அயன்மன்னும் யானை துரந்தரி
தேரும் அதரகத்தே.
395
______________________________________________________________
கழல் சிற்றம்பலவர் தென்னம்
பொதியில் - இமையோரிறைஞ்சும் நுண் செயல்தங்கிய நல்ல வீரக்கழலணிந்த திருவடியையுடைய சிற்றம்பலவரது
தெற்கின்கணுளதாகிய பொதியிலிடத்து; புயல் மன்னு குன்றில் பொம்மென் இருள்வாய் - புயறங்கிய
இக்குன்றிற்செறிந்த விருளின்கண்ணே; அயல் மன்னும் யானை துரந்து - பக்கத்துத்தங்கும் யானைகளையோட்டி;
அரி தேரும் அதரகத்து - அரிமா அவைபுக்க விடந்தேடும் வழியகத்து; பொருவேல் துணையா - தமது
பொருவேலே துணையாக வந்து; இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு - இயல்பாகிய நிலை பெற்றவன்பை
நமக்குத் தந்தவர்க்கு; நிலை என் - யானிவ்வாறுடம்படாது நிற்குநிலை என்னாம்! இது தகாது எ-று.
பெயரெச்சத்திற்கும் பெயர்க்கும்
ஒருசொன்னீர்மைப் பாடுண்மையின், இயன்மன்னுமன்பெனத் தொக்கவாறறிக. இயல்பைப் பொருந்தியவன்பெனினு
மமையும். அதரகத்து வந்தென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. புயன்மன்னு குன்றிலன்பு தந்தார்க்கெனக்
கூட்டுக.
தகுதியின் - தகுதியான். மிகுபதம்
- ஆற்றாமை மிக்க வளவு. தகுதியி லூரனெனப் பாடமாயின், தகுதியில்லாத மிகுபத மென்க. மெய்ப்பாடு:
அச்சம். பயன்: சிவப்பாற்றுதல்.
395
|