New Page 1
பரத்தையிற்
பிரிவு
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தே லதுவன் றிதுவோ
வருவதொர் வஞ்சனையே.
394
25.44 துனியொழிந்துரைத்தல்
துனியொழிந்துரைத்தல் என்பது
ஊடனீடலால் தலைமகனதாற்றாவாயில் கண்ட தலைமகள், அன்று நங்குன்றிடத்து மிக்க விருளின்கண்ணே
அரிதிரண்டுயானை வேட்டஞ்செய்யும் அதரகத்துத் தமது வேலே துணையாக வந்து இயல்பைப் பொருந்தியவன்பை
நமக்குத் தந்தவர்க்கு இன்று நாமுடம்படாது நிற்குமிந்நிலைமை என்னாமெனத் துனியொழிந்து அவனோடு
புணர்ச்சிக் குடம்படா நிற்றல். அதற்குச் செய்யுள்-
395. இயன்மன்னும் அன்புதந்
தார்க்கென்
நிலையிமை யோரிறைஞ்சுஞ்
செயன்மன்னுஞ் சீர்க்கழற்
சிற்றம்
பலவர்தென் னம்பொதியிற்
______________________________________________________________
இனிய கடைக்கணோக்கத்தை முன்னெனக்குத்
தந்து; பெருந்தேன் என நெஞ்சு உகப் பிடித்து ஆண்ட - பெருந்தேன் போலவினிதாய் என்னெஞ்சமுருக
என்னைப் பிடித்துத் தன்வயமாக்கிய; நம் பெண் அமிழ்தம் அது அன்று - நமது பெண்வடிவையுடைய அமிழ்தமாகிய
அது இதுவன்று; இதுவோ வருவது ஓர் வஞ்சனை - இதுவோ வருவதொருமாயம்; வருந்தேல் - அதனான் நீ வருந்தாதொழி
எ-று.
ஓகாரம்: ஒழியிசைக்கண் வந்தது.
தன்னைநோக்கி யொரு முயற்சியுமில்லாத யான் பிறவித்துன்பத்திற் பிழைக்கத் தானே வந்து தன்னிணைமலர்க்கண்ணின
தினிய கடைக்கணோக்கத்தைத் தந்து பெருந்தேன் போன்றினிதாய், என் வன்மனநெகிழ என்னை வலிந்து
பிடித்தடிமைக்கொண்ட பெண்ணமிழ்தமென வேறுமொரு பொருள் விளங்கியவாறு கண்டுகொள்க. மெய்ப்பாடு:
அழுகை. பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்.
394
25.44. தகுதியி னூரன் மிகுபத
நோக்கிப்
பனிமலர்க் கோதை துனியொ ழிந்தது.
இதன் பொருள்: இமையோர்
இறைஞ்சும் செயல் மன்னும் சீர்க்
|