பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
619

பரத்தையிற் பிரிவு

    விழுமிய நாட்டு விழுமிய
        நல்லூர் விழுக்குடியீர்
    விழுமிய அல்லகொல் லோஇன்ன
        வாறு விரும்புவதே.

393

25.43 ஊடல் நீடவாடியுரைத்தல்

   
ஊடல் நீடவாடியுரைத்தல் என்பது தணிக்கத் தணியாது மிகுத்துரைத்துத் தலைமகள் மேன்மேலு மூடாநிற்ப, அன்று அம்மலையிடத்துத் தன்னையெய்துதற்கோ ருபாய மின்றி வருந்தா நிற்ப யானுய்யும் வண்ணந் தன்னிணை மலர்க்கண்ணினது இனிய நோக்கத்தைத் தந்தருளி என்னைத்தன்வயமாக்கிய நம்பெண்ணமுதம் அதுவன்று; இது நம்மைவருத்துவதோர் மாயமாமெனத் தன்னெஞ்சிற்குச் சொல்லி ஊடனீடத் தலைமகன் வாடாநிற்றல். அதற்குச் செய்யுள்-

394. திருந்தேன் உயநின்ற சிற்றம்
        பலவர்தென் னம்பொதியில்
    இருந்தேன் உயவந் திணைமலர்க்
        கண்ணின்இன் நோக்கருளிப்

_______________________________________________________________

இன்னவாறு விரும்புவ போல்வன வென்பது கருத்தாகலின், ஒருமைப் பன்மைமயக்கம் அமையுமாறு முடைத்து. இன்னவாறென்பதற்கு இன்ன வண்ணம் விரும்புத லெனினுமமையும். விரும்புத லென்பதூஉம் பாடம். ஆடல் - நுடக்கம். மெய்ப்பாடும் பயனும் அவை.

393

25.43.  வாடா வூடல்
       நீடா வாடியது.

இதன் பொருள்: திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில் - ஒருவாற்றானுந் திருந்தாத யான் பிறவித் துன்பத்திற் பிழைக்கவந்து நின்ற சிற்றம்பலவரது தெற்கின்கணுள தாகிய பொதியிலிடத்து; இருந்தேன் உய வந்து - ஒரு முயற்சியுமின்றியிருந்த யானுய்யும்வண்ணம் வந்து; இணைமலர்க் கண்ணின் இன்நோக்கு அருளி - தன்னுடைய இணைந்த மலர்போலுங் கண்களினது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தும் நாணோடுகூடிய நோக்கமாகிய