நன
பரத்தையிற்
பிரிவு
நன்றுஞ் சிறியவ ரில்லெம
தில்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவரு ளித்துணை
சாலுமன் னெங்களுக்கே.
392
25.42 மிகுத்துரைத்தூடல்
மிகுத்துரைத்தூடல் என்பது கலவிகருதிப்
புலவாநின்ற தலைமகள், புணர்தலுறாநின்ற தலைமகனுடன் நீர் விழுமிய நாட்டு விழுமியநல்லூர்
விழுமியகுடியிலுள்ளீர்; எம்போல் வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய வல்லவென
மிகுத்துரைத்தூடா நிற்றல். அதற்குச் செய்யுள்-
393. செழுமிய மாளிகைச்
சிற்றம்
பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி
லேழினும் வாழியரோ
____________________________________________________________
செய்ய வேண்டுவ துண்டோ? எ-று.
மன்னும் ஓவும்: அசை நிலை.
சாலுமன்னென்புழி மன்னும் அசைநிலைபோலும். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புலத்தல்; புலவி நீங்கியதூஉமாம்.
25.42. நாடும் ஊரும் இல்லுஞ்
சுட்டி
ஆடற் பூங்கொடி யூடி யுரைத்தது.
இதன் பொருள்: செழுமிய
மாளிகைச் சிற்றம்பலவர் - வளவிய மாளிகைகளாற் குழப்பட்ட சிற்றம்பலத்தையுடையார்; அன்பர்
சிந்தைச் சென்று கழுமிய கூத்தர் - அன்பர் சிந்தைக்கட் சென்று பொருந்திய கூத்தர்; கடி
பொழில் ஏழினும் - அவரது காவலையுடைய வுலகமேழினுள்ளும்; விழுமிய நாட்டு விழுமிய நல்லூர்
விழுக்குடியீர் - சிறந்தநாட்டின்கட் சிறந்தநல்லவூரிற் சிறந்தகுடியிலுள்ளீர்; இன்னவாறு
விரும்புவது விழுமிய அல்ல கொல்லோ-எம்போல் வாரிடத்து இத்தன்மையவாகிய நெறியை விரும்புதல்
உமக்குச் சிறந்தனவல்லபோலும் எ-று.
வாழியும் அரோவும்: அசைநிலை. விரும்புவ
தென்புழி,
|