பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
617

வந

பரத்தையிற் பிரிவு

    வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
        மாறென் வளமனையிற்
    கொந்தார் தடந்தோள் விடங்கால்
        அயிற்படைக் கொற்றவரே.

391

25.41 கலவிகருதிப் புலத்தல்

   
கலவிகருதிப் புலத்தல் என்பது புனலாட்டுவித்தமைகூறிப் புலவாநின்ற தலைமகள், ஊடறீர்க்க நுதலுந்தோளு முதலாயினவற்றைத் தைவந்து வருடித் தலையளி செய்யாநின்ற தலைமகனோடு, எம்முடைய சிறிய வில்லின்கண்வந்து அன்று நீயிர்செய்த தலையளி எங்கட்கு அன்று வேண்டுதுமாயினும் இன்று உமது திருவருள் எங்கட்கு நீயிர்வந்த இத்துணையுமமையும்; வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லை யெனக் கலவிகருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்

392. மின்றுன் னியசெஞ் சடைவெண்
        மதியன் விதியுடையோர்
    சென்றுன் னியகழற் சிற்றம்
        பலவன்தென் னம்பொதியில்

______________________________________________________________

அப்படிற்று நிலையால். விட்டுரைத்தது - வெளிப்படவுரைத்தது. மெய்ப்பாடும் பயனும் அவை.

391

25.41.  கலைவள ரல்குல் தலைமகன் றன்னொடு
       கலவி கருதிப் புலவி புகன்றது.

   
இதன் பொருள்: மின் துன்னிய செஞ்சடை வெண் மதியன்-மின்னையொத்த செஞ்சடைக்கண்வைத்த வெண்பிறையையுடையான்; விதியுடையோர் சென்று உன்னிய கழல் சிற்றம் பலவன் -நற்பாலையுடையோர் சிற்றின்பத்திற்குக் காரணமான புலன்களை விட்டுச் சென்று நினைந்த கழலையுடைய சிற்றம்பலவன்; தென்னம் பொதியில் எமது இல்லம் நன்றும் சிறியவர் இல் - அவனது தெற்கின்கணுண்டாகிய பொதியிலிடத்து எமது குடி பெரிதுஞ் சிறியவரதுகுடி; அதனான், நல் ஊர -நல்ல ஊரையுடையாய்; இன்று உன் திருவருள் எங்களுக்கு இத்துணை சாலும் - முற்காலத்து நின்றலையளி வேண்டுது மாயினும் இப்பொழுது உனது திருவருள் எங்கட்கு நீ வந்தவித்துணையுமமையும்; நீ தலையளி