25
பரத்தையிற்
பிரிவு
25.40 புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல்
புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்
என்பது அணைந்த வழியூடாநின்ற தலைமகள் ஊடறீராநின்ற தலைமகனோடு, இவர் செய்த பிழையெல்லாம்
பொறுக்கலாம்; பலருமறிய வொருத்தியைப் புனலாட்டுவித்து அது செய்யாதார்போல என்மனையின்கணிவர்
வந்து நிற்கின்றவிது எனக்குப் பொறுத்தலரிதெனத் தணிக்கத் தணியாது பரத்தையைப் புனலாட்டுவித்தமை
கூறிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
391. செந்தார் நறுங்கொன்றைச்
சிற்றம்
பலவர்சில் லைநகரோர்
பந்தார் விரலியைப்
பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
____________________________________________________________
25.40. ஆங்கதனுக் கழுக்கமெய்தி
வீங்குமென்முலை விட்டுரைத்தது.
இதன் பொருள்: கொந்து
ஆர் தடந்தோள் விடம் கால் அயில் படைக்கொற்றவர் - கொத்துமாலைநிறைந்த பெரிய தோளினையும்
நஞ்சைக் காலுங் கூரிய படையினையுமுடைய கொற்றவர்; பாவி யெற்கு என் வள மனையின் நிற்குமாறு -
தீவினையேற்கு எனது வளமனையில்வந்து நிற்கின்றபடி; ஓர் பந்து ஆர் விரலியைப் பாய் புனல் ஆட்டி
- பந்துபயின்ற விரலாளொருத்தியைப் பாய்ந்த புனலையாட்டுவித்து; வந்தார் பரிசும் அன்றாய் -
வெளிப்படத் தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும் பரிசுமன்றாய் மனத்தவறு செய்யாதார் வந்து நிற்குமாறு
வந்து நின்றாராயின், அது பொறுத்த லரிது எ.-று.
செந்தார் நறுங் கொன்றைச் சிற்றம்பலவர்
தில்லை நகர் பாய்புனலாட்டி-செய்ய தாராகிய நறிய கொன்றைப் பூவினை யுடைய சிற்றம்பலவரது தில்லையாகிய
நகர்வரைப்பிற் பாயும் புனலையாட்டி யெனக்கூட்டுக.
தில்லைநகரோர் பந்தார்
விரலியென வியைப்பினுமமையும். மன்; ஒழியிசைக்கண்வந்தது; அசைநிலையெனினுமமையும். ஒருத்தியைப்
புனலாட்டி வந்தார் பரிசுமன்றாய்க் கொற்றவர் மனைக்கண் வந்து நிற்குமாறென்னென்று கூட்டியுரைப்பினுமமையும்.
கொத்துமாலை-பலவாயொன்றாகியமாலை. ஆங்கதனுக்கு-
|