ப
பரத்தையிற்
பிரிவு
பாறான் திகழும் பரிசினம்
மேவும் படிறுவவேங்
காறான் தொடல்தொட ரேல்விடு
தீண்டலெங் கைத்தலமே.
390
______________________________________________________________
யுடைய; சிற்றம்பலவர்
தில்லை நகர்வாய் வேல் திகழ் கண் இளையார்-சிற்றம்பலவரது தில்லைநகரிடத்துளராகிய வேல்
போலுங் கண்ணையுடைய நின்காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர் - நீ செய்கின்ற விதனை யறியின்
நின்னை வெகுள்வர். அதுவேயுமன்றி, மெய் பாலன் செய்த பால் திகழும் பரிசினம் - மேனி சிறுவனாலுண்டாக்கப்பட்ட
பால்புலப்படுந் தன்மையையுடையே மாதலின் நினக்குத் தகேம்; மேவும் படிறு உவவேம்-இதன் மேலே
யாமும் நீயும்
மேவுநாணின்மையோடு கூடிய கள்ளத்தை விரும்பேம்;
கால் தொடல் - அதனால்
எங்காலைத் தொடா தொழி; தொடரேல் - எம்மைத் தொடரவேண்டா; எம் கைத்தலம் தீண்டல் - எங்கைத்
தலத்தைத் தீண்டற்பாலையல்லை; விடு - விடுவாயாக எ-று.
திகழ்வயற்றில்லையெனவியையும்.
பால் திகழுமென்னும் இடத்து நிகழ் பொருளின்வினை மெய்யாகிய விடத்துமேலேறி நின்றது. நான்கிடத்தும்
தானென்பது அசைநிலை. பரிசினமேனுமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு; வெகுளி. பயன்: ஊடனீங்குதல்.
390
|