பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
614

சுவலங

பரத்தையிற் பிரிவு

    சுவலங் கிருந்தநந் தோன்றல்
        துணையெனத் தோன்றுதலால்
    அவலங் களைந்து பணிசெயற்
        பாலை யரசனுக்கே.

389

25.39 அணைந்தவழியூடல்

   
அணைந்தவழியூடல் என்பது தோழியாலூடல் தணிவிக்கப் பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், நீ செய்கின்ற விதனை யறியின் நின் காதலிமார் நின்னைவெகுள்வர்; அதுகிடக்க, யாம் மேனி முழுதுஞ் சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையை யுடையேம்; அதன்மேல் யாமும் நீ செய்கின்றவிக் கள்ளத்தை விரும்பேம்; அதனால் எங்காலைத் தொடாதொழி; எங்கையை விடுவாயாக எனத் தலைமகன் றன்னையணைந்தவழி ஊடாநிற்றல். அதற்குச் செய்யுள்-

390. சேறான் திகழ்வயற் சிற்றம்
        பலவர்தில் லைநகர்வாய்
    வேறான் திகழ்கண் இளையார்
        வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த

_____________________________________________________________

காட்டிடைஆட்டு உவந்த - புறங்காட்டின்கண் ஆடுதலை விரும்பிய - தவல் அங்கு இலாச் சிவன் தில்லை அன்னாய் - கேடங்கில்லாத சிவனது தில்லையையொப்பாய் - தழுவி முழுவி சுவல் அங்கு இருந்த - தழுவி முத்தங்கொண்டு சுவலிடத்தேறியிருந்த - நம் தோன்றல் துணை எனத் தோன்றுதலால் - நம்முடைய தோன்றலைத் தமக்குத் துணையெனக்கருதி வந்து தோன்றுதலான் - அவலம் களைந்து அரசனுக்குப் பணி செயற்பாலை - நினதுள்ளத்துக் கவற்சியைநீக்கி இனியரசற்குக் குற்றேவல் செயற்பாலை எ-று.

   
தழுவிமுழுவித்தோன்றுதலாலென வியையும். சுவற்கணங்கிருந்த வெனினு மமையும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்.

389

25.39.  தெளிபுன லூரன் சென்றணைந் தவழி
       ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.


   
இதன் பொருள்: சேல் திகழ் வயல் - சேல்விளங்கும் வயலை