New Page 1
பரத்தையிற்
பிரிவு
முத்தம் பயக்குங் கழுநீர்
விருந்தொடென் னாதமுன்னங்
கித்தக் கருங்குவ ளைச்செவ்வி
யோடிக் கெழுமினவே.
388
25.38 ஊடல் தணிவித்தல்
ஊடல் தணிவித்தல் என்பது விருந்தேற்றுக்கொண்ட
தலைமகளுழைச் சென்று, நம்முடைய தோன்றலைத் தனக்குத் துணையாகக் கொண்டுவந்து தோன்றுதலான் நினதுளத்துக்
கவற்சியை யொழிந்து இனி நம்மரசற்குக் குற்றவேல் செய்வாயாகவெனத் தோழி அவளை யூடறணிவியாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
389. கவலங்கொள் பேய்த்தொகை
பாய்தரக்
காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலாச்சிவன் தில்லையன்
னாய்தழு விம்முழுவிச்
____________________________________________________________
தழலையுடையவேல் போலப் பிறழ்ந்து;
முத்தம் பயக்கும் கழுநீர்-நீர்த்துளியாகிய முத்தத்தையுண்டாக்காநின்ற கண்ணாகிய செங்கழுநீர்
மலர்; விருந்தொடு என்னாத முன்னம் - விருந்தோ டென்று சொல்லுவதற்கு முன்; கித்தக் கருங்குவளைச்
செவ்வி ஓடிக் கெழுமின - விரையப் பண்டைநிறமாகிய குவளைச் செவ்வி பரந்து மேவின! என்னமனையறக்கிழத்தியோ!
எ-று.
மத்தம் - மதமென்பாரு முளர். ஊரன்வரவென
வினையெச்சமாகப் பிரிப்பினுமமையும். கித்தமென் பதனைச் செய்யப்பட்ட தென்னும் பொருளதோர்
வடமொழித் திரிபென்பாரு முளர். விருந்து வாயிலாகப் புக்கவழி இல்லோர் சொல்லியது. மெய்ப்பாடு;
உவகை. பயன்; மெய்ம்மகிழ்தல்.
388
25.38. தோன்றலைத் துணையொடு
தோழி கண்டு
வான்றகை மடந்தையை வருத்தந்
தணித்தது.
இதன் பொருள்:
கவலம் கொள் பேய்த்
தொகை பாய்தர - கவற்சி கொள்ளுதற்கேதுவாகிய பேய்த்திரள் கரணங்களைப் பாயாநிற்ப-
|