|
|
சென்னி
வாரணக் கொடும்பகை யாகித்
தேவர்மெய் பனிப்புற வான்மிடை யுடுத்திரள் |
30
|
|
பொரியிற்
கொறிப்ப புரிந்தொரு ணாடித்
தாமரை பழித்த கைமருங் கமைத்தேய்
ஒருமையி ளொருங்கி யிருகைநெய் வார்த்து
நாரத னோம்பிய செந்தீக் கொடுத்த
திருகுபுரி கோட்டுத் தகர்வரு மதியோய் |
35
|
|
முலையென
விரண்டு முரட்குவடு மரீஇக்
குழற்காடு சுமந்த யானைமகட் புணர்ந்தோய்
செங்கட் குறவர் கருங்காட்டு வளர்த்த
பைங்கொடி வள்ளி படர்ந்தபுய மலையோய்
இமயம் பூத்த சுனைமாண் டொட்டில் |
40
|
|
அறிவிற்
றங்கி யறுதாய் முலையுண்
டுழன்மதில் சுட்ட தழனகைப் பெருமான்
வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்
ஓமெனு மெழுத்திற் பிரமம் பேசிய
நான் மறை விதியை நடுங்குசிறை வைத்துப் |
45
|
|
படைப்புமுதன்
மாய வான்முதற் கூடித்
தாதையு மிரப்பத் தளையது விடுத்தோய்
கூடஞ் சுமந்த நெடுமுடி நேரி
விண்டடை யாது மண்புகப் புதைத்த
குறுமுனி தேற நெடுமறை விரித்தோய் |
50
|
|
ஆறுதிரு
வெழுத்துங் கூறுநிலை கண்டு
நின்றாட் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்
மணிக்கா லறிஞர் பெருங்குடித் தோன்றி
இறையோன் பொருட்குப் பரணர்முதல் கேட்பப்
பெருந்தமிழ் விரித்த வருந்தமிழ்ப் புலவனும் |
55
|
|
பாய்பா
ரறிய நீயே யாதலின்
வெட்சிமலர் சூழ்ந்த நின்னிரு கழற்கால்
குழந்தை யன்பினொடு சென்னிதலைக் கொள்ளுதும்
அறிவுநிலை கூடாச் சின்மொழி கொண்டு
கடவுட் கூறா வுலவா வருந்தியும் |
60
|
|
சனனப்
பீழையுந் தள்ளாக் காமமும்
தற்படு துயரமு மடைவுகெட் டிறத்தலும் |