பக்கம் எண் :

மூலமும் உரையும்9



யையும் இன்று தெளிவுண்டாக முடித்துத் தருக! என்று கருதியே; என்று வினை முடிவு செய்க. பிறவிக் கலக்கத்தை முடித்தலாவது பிறவிக் கடலினின்றும் கரையேற்றி வீடளித்தல் என்க. புன்மொழித் தொகையை முடித்தலாவது இந்நூல் இடையூறின்றி முடித்தற்கு அருள் செய்தல் என்க. இது வழிபடு கடவுள் வாழ்த்து.

 
 
முருகக் கடவுள் வாழ்த்து
நேரிசையாசிரியப்பா
 
   
5
  பாய்திரை யுடுத்த ஞாலமுடி வென்ன
முடங்குளை முகத்துப் பஃறோ ளவுணனொடு
மிடையுடு வுதிரச் செங்களம் பொருது
ஞாட்பினுண் மறைந்து நடுவுறு வரத்தால்
வடவைநெடு நாக்கின் கிளைகள்விரிந் தென்னச்
10
  செந்துகிர் படருந் திரைகடற் புக்குக்
கிடந்தெரி வடவையிற் றளிர்முக மீன்று
திரையெறி மலைகளிற் கவடுபல போக்கிக்
கற்செறி பாசியிற் சினைக்குழை பொதுளி
அகறிரைப் பரப்பிற் சடையசைந் தலையாது
15
  கீழிணர் நின்ற மேற்பகை மாவின்
ஓருட லிரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேரளி யுமைக்க ணின்று
தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி யரத்தநெடு வேலோய்
20
  கீழ்மே னின்றவக் கொடுந்தொழிற் கொக்கின்
கூறிரண் டாய வொருபங் கெழுந்து
மாயாப் பெருவரத் தொருமயி லாகிப்
புடவிவைத் தாற்றிய பஃறலைப் பாந்தள்
மண்சிறுக விரித்த மணிப்படந் தூக்கி
25
  விழுங்கிய பல்கதிர் வாய்தொறு முமிழ்ந்தென
மணிநிரை சிந்தி மண்புக வலைப்பக்
கார்விரித் தோங்கிய மலைத்தலைக் கதிரென
ஓவறப் போகிய சிறைவிரி முதுகிற்
புவனங் காணப் புகழொடு பொலிந்தோய்
  போழ்படக் கிடந்த வொருபங் கெழுந்து
மின்னன் மாண்ட கவிரலர் பூத்த