பக்கம் எண் :

மூலமும் உரையும்101



இல்வாழ்க்கைச் செல்வத்தவர் என்பதாம். அறிவு அறிவித்தது-அறியப் படுவதனை அறிவித்தது என்க. இனி பாங்கி அறிவறிவித்தது என்பதும் பாடம். இதற்குத் தலைவனது குறிப்பைக் கண்டு தோழி தலைவிக்குக் குறிப்பினால் கூறினாள் என்று தோழி கூற்றாக்குக. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-பிரிவுணர்த்தல்.

 
 

செய்யுள் 11

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலையினிற் சலியா நிலைமை யானும்
பலவுல கெடுத்த வொருதிறத் தானு
நிறையும் பொறையும் பெறுநிலை யானுந்
தேவர் மூவருங் காவ லானுந்
தமனியப் பராரைச் சைல மாகியு
10
  மளக்கவென் றமையாப் பரப்பின தானு
மமுதமுந் திருவு முதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுத லானு
முள்ளுடைக் கோட்டு முனையெறி சுறவ
மதிர்வளை தடியு மளக்க ராகியு
15
  நிறையுளங் கருதி னிகழ்ந்தவை நிகழ்பவை
தருதலின் வானத் தருவைந் தாகியு
மறைவெளிப் படுதலிற் கலைமக ளிருந்தலி
னகமலர் வாழ்தலிற் பிரம னாகியு
முயிர்பரிந் தளித்தலிற் புலமிசை போக்கலிற்
20
  படிமுழு தலந்த நெடியோ னாகியு
மிறுதியிற் சலியா திருந்த லானு
மறுமைதந் துதவு மிருமை யானும்
பெண்ணிடங் கலந்த புண்ணிய னாகியு
மருள்வழி காட்டலி னிருவிழி யாகியுங்
25
  கொள்ளுநர் கொள்ளாக் குறையா தாகலி
னிறையுள நீங்கா துறையரு ளாகியு
மவைமுத லாகி யிருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி யுண்ணிதழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை யிருசெவி யுண்ணுங்
  குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென
மதிமலி புரிசைத் திருமுகங் கூறி
யன்புருத் தரித்த வின்பிசைப் பாணன்