|
48-53: பாடல்....................பாலையில்
(இ-ள்) படும்அழல்
நீக்க-உண்டாகும் வெப்பத்தைத்தணித்துக் கொள்ளுதற் பொருட்டு; பாடல்சால் பச்சைக்
கோடகக் காற்றை-நல்லிசைப் புலவர்களின் பாடலுக்கு அமைந்த பசிய காற்றாகிய குதிரையினை;
மையில் காட்சிக் கொய்யுளை நிற்ப-குற்றமற்ற காட்சியினையுடைய கத்திரிகையால் கொய்து
மட்டஞ்செய்த பிடரிமயிர் சிலிர்த்து நிற்பவும்; இருகால் வயிற்றிலிருந்து வாய்முளைத்தென்ன-முன்னங்கால்
இரண்டும் வயிற்றினுள்ளிருந்து வாயினூடே முளைத்தாற்போலத் தோன்றும்படி; முகனிற்கு அருகா
துரந்து-முகத்திற்குப் பக்கத்திலே செல்லும்படி முடுக்கி; குடகடல் குளிக்கும்-மேற்கடலில்
குளித்தற்குக் காரணமான; நாவாய் குறியா தீவாய் பாலையில்-நாவினையுடைய வாயினாலும்
சொல்லப்படாத தீப் பொருந்திய பாலை நிலத்தின்கண் என்க.
(வி-ம்.) அழல்-வெப்பம்.
பாடல்சால் காற்றுக் கோடகத்தை என்பது கருத்து. கோடகம்-குதிரை. மை-குற்றம். உளை-பிடரி
மயிர். விரைந்து பாய்ந்து செல்லும் குதிரையின் முன்னங்கால்களிரண்டும் அதன் முகத்தை
மிகவும் அணுகித் தோன்றுமாகலின் அக்கால்கள் அதன் வாயில் நின்றும் தோன்றினாற்போல
அருகாக என்றார். முகன்-முகம். அருகா எனது ஈறு தொக்கது. துரத்தல்க்-முடுகுதல். குடகடல்-மேலைக்கடல்.
நாவாய்-நாவினையுடையவாய். வாயால் குறித்தால் வாய் வெந்துபோம் என்பது கருத்து.
இருதுவே
றின்மையால் எரிசுடர்க் கடவுளும்
கருதின்வேம் உள்ளமும் காணில்வேம் நயனமும் |
(கம்ப.
தாடகை. 5) |
எனவும், கம்ப நாடரும்
கூறுதல் காண்க.
54-58:
தம்மில்...........................அறிவே
(இ-ள்) தம்மில்
இன்பங்கூடி-கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தம்மிற்றாமே தலைப்பட்டு இன்பமெய்தி
மேலும்; சூளுடன் ஒன்றி விளைந்து சென்றாட்கு-தலைவனுடைய வஞ்சினமொழிய்யோடே பொருந்திக்
காதல் முதிர்ந்து செவ்விதேர்ந்து அக்காதலனனுடன் என்று அந்நங்கைக்கு; உடைந்து உண்பதும்
அடங்கி-நெஞ்சுடைத்து வருந்தி உண்ணுதலும் இன்றி; பொன்பதி நீங்கி-அழ்க்ஷகிய ஊரைவிட்டு
இப்பாலை நிலத்தே வந்து; பெருங்குரல் முழங்கக் கூஉய்-பெருங்குரலெடுத்துத்
|