பக்கம் எண் :

மூலமும் உரையும்155



திசையெல்லாம் முழங்கும்படி கூப்பிட்டு; பழங்கண் எய்தியது-இம்மூதாட்டியார் இவ்வாறு துன்பம் எய்தியதற்குக் காரணம்; பேதமை அறிவே-இவருடைய அறியாமையே ஆகும் என்க.

     (வி-ம்.) தம்மில் இன்பங்கூடி என்க. அஃதாவது தம்முள் தாமே கூடி இயற்கைப் புணர்ச்சி எய்தி என்றவாறு. சூள்-தலைவன் உரைத்த வஞ்சினம். அஃதாவது இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்றைத் தகைவன் தலைவியின் கையைப் பற்றித் தெய்வம் சான்றாகச் சூளுரைத்துதுத் தலைவியைத் தேற்றுதல். இதனைத் தீராத் தேற்றம் என்பர். இங்ஙனம் தலைவன் சூண்மொழிவன் என்பதனை,

  எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியந்துறை
நேர்இறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே”
(குறுந். 53)

எனவரும் செய்யுளாலும் உணர்க. நெஞ்சுடைத்து என்க. பொன்பதி-அழகிய ஊர். கூஉய்-குவி. பழங்கண்-துன்பம். பேதமை அறிவு-அறியாமை. உண்பதும் என்புழி, உம்மை: சிறப்பும்மை.

இனி, இம் மூத்தாட்டியார் எம்மெதிர் கூறிய இம்மொழிக்குச் சிறுமை உண்டு. அஃதெற்றாலெனின் செம்மகள் இன்பம் கடல் சென்றில: தரளத்தின் இன்பமும் அவ்வழியான. பொருப்பு வளர்த்த ஆரம், மகிழ்நர் பதிபுகுந்தால் அதன்பின் சென்றது உண்டோ. கணக்கர் உள்ளம் பெற்ற கல்வி மகளை அம்மன அன்னை கவரக் கண்டிலம்; கரும்பு தரும் இன்பத்தை வயல் சாயா. மலை பசுங்கொடியைத் தொடர்ந்தும் இலை. இச்சொற் கிடக்க இத்தீவாய்ப் பாலையில் தம்மில் இன்பம் கூடிச் சென்றாளுக்கு இவர் உடைந்து அடங்கி நீங்கிக் கூஉய்யப் பழங்கண் எய்தியது அறியாமையே என இயைத்துக் கொள்க. இச்செய்யுட் கருத்தோடு,

  பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவதா மென்செய்யு
நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந்
தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ்
சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே;”

என்வரும் கலியினையும் ஒப்பு நோக்குக. மெய்ப்பாடும் பயனும் அவை.