பக்கம் எண் :

182கல்லாடம்[செய்யுள்21]



லேனும் கூறுகின்றிலை எனினுமாம். கண்டே கூறுகின்றிலை என்னும் உணர்வினளாகலின் கையாறெய்திடு கிளவியாயிற்று. மெய்ப்பாடு-அழுகை. பயன்-அவாவுயிர்த்தல்.

 
 

செய்யுள் 21

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து
திக்குநிலை படர்ந்த முகிற்பா சடையு
மிடையிடை யுகளு மீனா மீனுஞ்
செம்முகிற் பழநுரை வெண்முகிற் புதுநுரை
யெங்குஞ் சிதறிப் பொங்கியெழு வனப்பும்
10
  பலதலை வைத்து முடியாது பாயு
மெங்குமுகம் வைத்த கங்கைக் காலுங்
கொண்டுகுளிர் பரந்த மங்குல்வா விக்குண்
முயலெனும் வண்டுண வமுதநற வொழுக்கித்
தேவர் மங்கையர் மலர்முகம் பழித்துக்
15
  முறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதித்தா மரையே மயங்கிய வொருவே
னிற்பாற் கேட்கு மளிமொழி யொன்றுள
மீன்பாய்ந்து மறிக்கத் திரையிட மயங்கிச்
சூவயி றுளைத்து வளைகிடந்து முரலும்
20
  புன்னையம் பொதும்பரிற் றம்முடை நெஞ்சமு
மீணுண வுள்ளி யிருந்தவெண் குருகெனச்
சோறுநறை கான்ற கைதைய மலருங்
பலதலை யரக்கர் பேரணி போல
மருங்குகூண் டெழுந்து கருங்காய் நெருங்கி
25
  விளைகட் சுமந்த தலைவிரி பெண்ணையு
மின்னுங் காணக் காட்சிகொண் டிருந்த
வன்னத் திரளும் பெருங்கரி யாகச்
சொல்லா லின்பமு முயிருறத் தந்து
நாளிழைத் திருக்குஞ் செயிர்கொ ளற்றத்து
  மெய்யுறத் தணந்த பொய்யின ரின்று
நெடுமலை பெற்ற வொருமகள் காண
நான்முக விதியோ தாளந் தாக்க
வந்தநான் முகனை யுந்தி பூத்தோன்