:திருக்கோவையார்
செய்யுள். 134
தமர் நினைவுரைத்து வரைவுகடாதல்
இற்செறிவறிவித்து
வரைவுகடாயதோழி. அவண் முலை.... திடைவருத்துவதனைக் கண்டு எம ரிற்செறிப்பா ராக நின்றார்;
அயலவரு மகட்பேச நினையாநின்றாரெனத் தமர் உரைத்து வரைவுகடவா நிற்றல். அதற்குச்
செய்யுள்-
சுற்றுஞ்
சடைக்கற்றைச் சிற்றம்
பலவற் றெழாதுதொல்சீர்
கற்று மறியல ரிற்சிலம்
பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை
யினத்தம ரெற்செரிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர்
பகர்பெரு வார்த்தைகளே.
|
விற்செறி நுதலியை இற்செறி விப்பரென் றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.
(இ-ள்) சிலம்பா-சிலம்பா;
சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம்பலவற் றெழாது-சுற்றப்பட்ட சடைத்திரளையுடைய சிற்றம்பலவனை
முற்பிறவியிற்றொழாமையான்; கற்றும் தொல்சீர் அறியலரின்-நூல்களைக் கற்றுவைத்தும்
அவனது பழைய புகழை யறியாதாரைப்போல; இடை நைவது கண்டு-முலைதாங்கலில்லாத திடை வருந்துவதனைக்
கண்டு; எற்றும்திரையின் அமிர்தை இனிமதர் இற்செறிப்பார்-எற்றுந்திரையையுடைய கடலிற்பிறந்த
இனிய யமிர்தத்தையொப்பாளை இப்பொழுது தமர் இற்செறிப்பார்-மற்றும் சீறூர் பகர்
பெரு வார்த்தைகள் சிலபல-அதுவுமின்றி இச்சீறூராற் பகரப்படும் பெரியவார்த்தைகள்
சிலபலவுள; எ-று.
(வி-ம்.) எற்றுந்
திரை என்பது சினையாகிய தன்பொருட்கேற்ப வடையடுத்து நின்றதோராகுபெயர். இற்செறிப்பா
ரென்பது; ஆரீற்று முற்றுச் சொல். வினைப்பெய ரென்பாருஞ் செறிப்பரென்று பாடமோதுவாருமுளர்.
சிலபலவென்பது பத்தெட்டுளவென்பது போலத் துணிவின்மைக்கண் வந்தது. சீறூர்ப்பக ரென்பதூஉம்
பாடம். மெய்ப்பாடு-அச்சத்தைச் சார்ந்த பெருமிதம்; பயன்-வரைவுகடாதல்.
:கல்லாடர் தாம் பாடிய
கல்லாடம் என்னும் இந்நூலில் திருக்கோவையாரில் அமைந்த நூறு துறைகளின் பொருளையமைத்துப்
பாடினார் என வரலாறு அமைந்திருப்பதால் ஒவ்வொரு செய்யுட்கும் உரிய திருக்கோவையார்ப்
பாடல்முதற்கண் காட்டப்பட்டுள்ளது.
|