பக்கம் எண் :

மூலமும் உரையும்25



(உரை)

கைகோள், களவு, தோழிகூற்று

துறை: தமர் நினைவுரைத்து வரைவு கடாதல்.

(இலக்கணம்) இதற்கு, “களனும்............வரைதல் வேண்டினும்”
(தொல். கள. 23) என்னும் விதிகொள்க,

1 - 3: அமுதம்........................ஒளித்த

     (இ-ள்) அமுதமும் தருவும்-அமிழ்தும் கற்பகத்தருவும்; படைத்த உடலக் கண்ணன்-சிறப்பாகப் பெற்றுள்ள இந்திரன்; பணிவர-தன் ஏவலின்கண் நின்றொழுகாநிற்ப; உலகுகவர்ந்து உண்ட-அவனுடைய வானுலகத்தின் வளங்களை யெல்லாம் தன் ஆற்றலால் கவர்ந்து நுகர்ந்த; களவு உடை நெடுஞ்சுவர் கிளை-வஞ்சகமுடைய நெடிய சூரனுடைய தம்பி; களம்விட்டு ஒளித்த-போர்க்களத்தினை விட்டு ஓடி ஒளிந்துகொண்ட என்க.

     (வி-ம்.) இந்திரனுடைய செல்வங்களுள் வைத்துத் தலைசிறந்தனவாகலின் அவற்றையே விதந்தோதினார். உடலைக்கண்ணன்-உடலெங்கும் கண்களை யுடையோன் என்றது, தேவேந்திரனை. அவன் அகலிகை காரணமாகக் கௌதம முனிவன் சாபத்திற்கு ஆளாய் உடல் முழுவதும் கண்களை யுடையன் ஆயினன் என்பர். இதனை “தூயவன் அவனை...................ஆயிர மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டா கென்று, ஏயினன், அவை யெல்லாம் வந்து இயைந்தன.....................அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள் பிரமன் முன்னா, வந்து கோதமனை வேண்ட மற்றவை தவிர்த்து மாறாச் சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரங் கண்ணாக்க” எனவரும் இராமாவதாரத்தானும் (அகலி. 78 . 81) உணர்க. உலகு: ஆகுபெயர் உண்ணல்-ஈண்டு நுகர்தல் என்னும் பொருள் குறித்து நின்றது. களவு-வஞ்சம். கிளை-தம்பி. அவன் தாரகாசுரன் என்க. ஒளித்தமலை என மேலே சென்று இயையும்.

4 - 6: அருள்................................வேல்

     (இ-ள்) அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என-அருளால் நிரம்பப் பெற்று அமைதியுற்ற மெய்க்கல்வியினையுடைய சான்றோருடைய உள்ளம் போல; தேக்கிய தேனுடன் இறால் மதிகிடக்கும்-நிரம்பப் பெற்ற தேனோடு கூடிய இறால் திங்கள் போன்று யாண்டும் கிடைத்தற்குக் காரணமான; எழுமலை பொடித்த கதிர்இலை நெடுவேல்-எழுச்சியையுடைய மலையை நீறுசெய்த ஒளிமிக இலையினையுடைய நெடிய வேற்படையினை ஏந்திய என்க.