பக்கம் எண் :

மூலமும் உரையும்263



மலர்த்துதி என்ற வினைக்கேற்பச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது.

      இனி, பரிதிவானவனே என்மகள் சுரத்திறந்தனள். நீ அவளை நின் அழல் மேனியால் வாட்டாமல் முகிற்படாம் கொண்டு மூடி நின்னைக்கண்டு மனமும் களிவர அவள்முகத்தை மலர்த்துவாயாக. இது யான் வேண்டும் வரம்என வினைமுடிவு செய்க. இது யான் வேண்டும் வரம் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடும் பயனும் அவை.