பக்கம் எண் :

266கல்லாடம்[செய்யுள்30]



20
  முனிவர் செங்கரஞ் சென்னி யாக்க
வுருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப
மும்முலை யொருத்தியை மணந்துல காண்ட
25
  கூடற் கிறைவ னிருதா ளிருத்துங்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப்
பிறவியுங் குற்றமும் பிரிந்தன போலப்
பீரமு நோயு மாறின்
வாரித் துறைவற் கென்னா தும்மே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: இன்னலெய்தல்.

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் ‘வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்’ எனவரும் விதிகொள்க.

1-5: வள்ளுறை.........................வெறியில்

     (இ-ள்) வள்உறை கழித்து-வலிய உறையினை நீக்கி; துளக்குவேல் மகனும்-திரிகின்ற வேலையுடைய மகனாகிய வேலனும்; நெல்பிடித்து அன்பும் மயில் கழுத்தும் மலை அடியும் உரைக்கும் குறியினோரும்-முறத்திலே பரப்பிய நெல்லினை மூன்றும் இரண்டும் ஒன்றும்படக் கையால் அள்ளிப்பிடித்து உதோ எமக்கு முருகனும் அவன் ஏறும் மயிலின் எருத்தும் அவனது கோழிக் கொடியும் தோன்றுகின்ற என்று கூறுகின்ற குறிசொல்லுதலையுடைய கட்டுவித்தியரும் அவர் இது தெய்வத்தினாலாயது என்று கூறியதனால்; நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும்-நடுங்குதற்குக் காரணமான துன்பத்தினால் வந்த மெலிவினையுடைய எஞ்செவிலித்தாயருங் கூடி; அயரா வெறியில்-நிகழ்த்தாநின்ற இவ்வெறியாடலாலே என்க.

     (வி-ம்.) வள்-வலிமை. துளக்குதல்-சுழற்றுதல். வேன்மகன்-வேலன் (பூசாரி) அன்பு-முருகன் அன்பு என்னும் சொற்கு முருகு என்பதும் பொருளாகலின் முருகனை அன்பு என்றாள். அன்பே கடவுள் என்பது ஈண்டு நினைக. கழுத்தையுடைய மயில் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்ளினுமாம். மலையடி-போர் செய்யும் இயல்புடையன ஆதல் உணர்க. கட்டுவித்தியர் முறத்தில் நெல்லைப் பரப்பி அதனைக் கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு தெய்வமேறப்