பட்டு மெய்விதிர்த்து
உதோ முருகன் வந்தான்! உதோ மயில் தோன்றுகின்றது! உதோ சேவல் தோன்றுகின்றது!
என்று கூறிக் குறிகூறுதல் இயல்பாகலின் அவரை நெற்பிடித்து அன்பும் மயிலும் மலையடியும்
உரைக்கும் குறியினோர் என்றாள். இதனை,
குயிலிதன் றேயென்ன
லாஞ்சொல்லி
கூறன்சிற் றம்பலத்தான்
இயலிகன் றேயென்ன லாகா
இறைவிறற் சேய்கடவும்
மயிலிதன் றேகொடி வாரணங்
காண்கவன் சூர்தடிந்த
அயிலிதன் றேயிதன் றேநெல்லிற்
றோன்று மவன்வடிவே (திருக்கோவையார்.
285) |
எனவரும் மணிவாசகர்
வாக்கானும் உணர்க. அயர்தல்-நிகழ்த்துதல். வேல்மகனும் குறியினோரும் அன்னையரும்
கூடி நிகழ்த்தும் வெறியாடலால் என்க.
5-7:
தண்டா............................என்னாம்
(இ-ள்)
ஈயாது உண்ணுநர் நெடும்பழிபோல-வரியார்க்கு வழங்காமல் தாமே உண்ணுகின்ற புன்செல்வருக்கு
உண்டாகிய பெரிய பழி நீங்காததுபோல; தண்டா அருநோய்-தீராத பெறுதற்கரிய என்னுடைய
இந்நோய்; போகாக்காலை-ஒழியாதவிடத்தே; புணர்க்குவ என்னாம்-அயலாஎ எம்மேல் ஏறட்டுக்கூறும்
பழிசொல்லால் எந்நிலையாதாம் என்க.
(வி-ம்.)
இதலே புகழாதலின் ஈயாமை நெடும்பழியாயிற்று. தண்டாத என்னும் பெயரெச்சத்தீறு தொக்கது.
அருநோய்-பெருதற்கரிய நோய். இவ்வெறியாடலால் எம்நோய் ஒழியாதவிடத்தே ஏதிலார்
அலர் தூற்றுதல் ஒருதலை அங்ஙனம் தூற்றின் யான் இறந்துபடுதலும் ஒருதலை என்பாள் போகாக்காலை
புணர்க்குவ என்னாம் என்றாள்.
8-11:
நான்கு....................ஓம்ப
(இ-ள்)
நான்கு எயிற்று ஒருத்தல் பிடர் பொலிவாரைப் பகை-நான்கு மறுப்பினையுடைய அயிராவதம்
என்னும் களிற்றி யானையின் எருத்திலே இருந்து பொலிவுறுகின்ற மலைகளின் பகைவனாகிய
தேவேந்திரன்; அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த-ஆறு கால்களையுடைய வண்டுகள் குடைதற்கிடனான
தேனையுடைய மலர்மாலையினை ஏந்தி நிற்பவும்; முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன்-முள்ளைத்
தண்டின்கண்ணுடைய செந்தாமரை மலரிலிருக்கும் நான்கு திருமுகங்களையுடைய பிரமன்; எண்ணிநெய்
இறைத்து மண அழல் ஓம்ப-
|