மும்முலை ஒருத்தியை மனந்து
உலகு ஆண்ட-மூன்று முலைகளையுடைய ஒப்பற்ற தடாதகைப் பிராட்டியாரைத் திருமணம் புணர்ந்துகொண்டு
உலகினைப் பாதுகாத்தருளிய; கூடற்கு இறைவன்-மதுரைமா நகரத்திற்குத் தலைவனாகிய சோமசுந்தரக்
கடவுளுடைய என்க.
(வி-ம்.)
ஆக்க எனவே குவிப்ப என்றாயிற்று. உருப்பசி-வானவர் நாட்டு நாடகமகளிருள் ஒருத்தி.
முன்வாழ்த்து-பழைய வாழ்த்துமாம். மும்முலை ஒருத்தி-தடாதகை.
21-25:
இருதாள்....................ஆதும்மே
(இ-ள்)
இருதாள் இருத்தும்-இரண்டு திருவடிகளையும் இடையறாது நினைக்கும்; கவையா வென்றி நெஞ்சினர்-வேறுபடாத
வெற்றியினையுடைய நெஞ்சினையுடைய மெய்யடியார்; நோக்க-அருளொடு நோக்குங்கால்; பிறவியுங்
குற்றமும் பிரிந்தனபோல-நோக்கப்படாதவருடைய பிறவிப்பிணியும் அதற்குக் காரனமான
இருள்சேர் இருவினையும் துவர நீங்கினவாதல் போல; பீரமும் நோயும் மாறின்-(இவ்வெறியாடலால்)
பசலையும் அது முதிர்ந்ததனால் உண்டான எந்துன்பமும் ஒரோவழி நீங்குமாயின் அப்பொழுது;
கடல் துறைவற்கு என்னாதும்-கடற்றுறைகளையுடைய எம்பெருமான் திறத்திலே யாம் எந்நிலையேம்
ஆகுவேம்; எனவே இரண்டிடத்தும் யாம் உயிர் வாழ்தலரிது; என்க.
(வி-ம்.)
இறைவனுடைய மெய்யடியார் அருள்நோக்க முற்றவிடத்து நோக்கப்பட்டோருடைய பிறவியுங்
குற்றமுன் ஒழிதல்போல ஒரோவழி முருகனுடைய அருள்நோக்குற்று என்னுடைய இப்பசலையும் நோயும்
ஒழிந்துவிடின் எம்பெருமான் இவட்குற்ற நோய்க்குத் தெய்வக்குறையே காரணம்போலும்.
எம்பால் வைத்த அன்பு காரணம் இல்லை எனக் கருதுதல் இயல்பாயிற்றே. அங்.ஙனமாயின்
அவன் என் அன்பை உணராது என்னை ஏதிலாட்டியாய் எண்ணுவன். அங்ஙனம் எண்ணுமிடத்தே யான்
உயிர்நீத்தல் ஒருடலை என்பாள் பீரமும் நோயும் மாறின் வாரித்துறைவற்கு என்னாதும்
என்றாள். எம்பெருமான் அன்பு கடலினும் பெரிது என்பாள் வாரித்துறைவன் என்றாள். இஃதிறைச்சிப்பொருள்.
இருவழியானும் யாம் வாழ்தலரிது என்பது குறிப்பெச்சம்.
இனி
வேலன் வெறியாடியும் நோய்நீங்காதாயின் ஏதிலார் புணர்க்குவ என்னாம். அன்றி ஒரோவழி
அவ்வெறியாடலால் எம் பீரமும் நோயும் மாறின் யாம் துறைவற்கு என்னாதும் என வினை
முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|