திங்களும் புயலும் பருதியும்
சுமந்த மலை-திங்கலையும் முகில்களையும் ஞாயிற்று மண்டிலத்தையும் தம் உச்சியிற் சுமந்த
மலையினின்றும்; வருங்காட்சிக்கு உரியவாகலின்-வாராநின்ற அழகுக்கு உரியதாதலால்;
நிறையுடைக்கல்வி பெறுமதிமாந்தர்-அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறூதிப்பொருள்
நான்கும் நிறைதலையுடைய மெய்க்கல்வியைப் பற்று மதிநுட்பமுடைய நல்லிசைப் புலவர்கள்;
பூமணி யானை பொன் என எடுத்து-பூ மணி யானை பொன் முதலிய மங்கலமொழிகளாலே தொடங்கி;
ஈன்ற-இயற்றிய; திங்களும் புயலும் பருதியும் சுமந்த-திங்கள் மண்டிலம், முகில்கள்,
ஞாயிற்று மண்டிலம் முதலியவற்றை வருணனை வாயிலாகத் தம்பாற் சுமந்த; மலைவருங் காட்சிக்குரிய
குற்றமற்ற அழகிற்குரிய; செங்கவியெனத் தோன்றி-செவ்விய பெருங்காப்பியமெனக் காணப்பட்டு;
நீளிடை பாரிடை நனிபரந்து-நீண்டதூரம் நிலத்திலே மிகவும் பரவி; இன்பம் பயக்கும்-மாந்தர்க்குப்
பேரின்பத்தை வழங்குகின்ற; பெருநீர் வையை வளைநீர்க்கூடல் உடல் உயிர் என்ன-மிக்க
நீரையுடைய வையைப் பேரியாறு சூழ்ந்த நீர்மையையுடைய நான்மாடக்கூடல் என்னும் மதுரைமாநகரம்
உடலாகவும் தான் அதற்கு உயிராகவும்; உறைதரும் நாயகன்-எழுந்தருளி இருக்கின்ற இறைவன்
என்க.
(வி-ம்.) வையையாற்றிற்குச்
சான்றோர் கவிஉமை. பூ முதலியவற்றை உவமைக்கும் பொருளுக்கும் ஏற்றபெற்றி இயைத்துச்
சிலேடை வகையால் பொருள் கொள்க. கவி-ஈண்டு ஆகுபெயராய்ப் பெருங்காப்பியத்தை உணர்த்தி
நின்றது. நல்லிசைப் புலவர் நூலுயற்றத் தொடங்குங்கால் பூ முதலிய மங்கலமொழிகளில்
ஒன்றை எடுத்துத் தொடங்குதல் மரபு. வையையாறும் தான் தோன்றும் குறிஞ்சியினின்றும்
பூ மணி யானை பொன் பொருள் முதலியவற்றை எடுத்துவருதல் உணர்க. யாற்றுக்குக் கூறுங்கால்
திங்களும் புயலும் பருதியும் சுமந்த மலையினின்றும் வரும் காட்சிக்கு உரியது எனவும்,
கவிக்குக் கூறுங்கால் திங்களும் புயலும் சுமந்த மலை முதலிய இயற்கைப்பொருள் வருணனை
வாயிலாய் வரும் காட்சிக்குரிய கவி எனவும் ஏற்றப்பெற்றி கூறிக்கொள்க. மலைவருங்
காட்சி-மலைவு அரிய காட்சி என்க. மலைவு-குற்றம்; அருமை-ஈண்டு இன்மை மேற்று. உரிய-உரியது.
ஈறுகெட்டு நின்றது; பன்மை ஒருமை மயக்கமுமாம். நிறை-நிறைதல். மதி-மதிநுட்பம். கல்விபெறு
மதிமாந்தர் என்றமையால் மதிநுட்பம் நூலோடுடைய நல்லிசைப்புலவர் என்பது பெற்றாம்.
எடுத்துச் சுமந்த காட்சியால் கவியெனத் தோன்றி என்க. நனி:உரிச்சொல் மிகுதிப்பொருட்டு;
நீளிடை நனிபரந்து பாரிடை இன்பம் பயக்கும் வையை என மாறிக் கூட்டிக்கொள்க. நீர்க்கூடல்-நீர்மையுடைய
கூடல். கூடல்-மதுரை. நாயகன்-இறைவன்.
9
- 15: கடுக்கை....................................கானத்து
(இ-ள்) கடுக்கை மலர்
மாற்றி-தனக்குரிய கொன்றை மலரைச் சூடாதுவிட்டு; வேம்புஅலர்சூடி-வேபமலர்மாலையை
|