பக்கம் எண் :

34கல்லாடம்[செய்யுள்2]



அணிந்து; ஐவாய் காப்புவிட்டு-ஐந்து தலைகளையுடைய பாம்பாகிய கங்கணத்தை ஒழித்து; அணிபூண் அணிந்து-பொன்னாலும் மணியாலும் ஆகிய அரசர்க்கியன்ற அணிகலன்களை அணிந்து; விரிசடை மறைத்து-தனது விரித்த சடையினை ஒளித்து; மணிமுடிகவித்து-மணிபதித்த முடியணிகலனை யணிந்து; விடைக்கொடி நிறுத்தி-தனக்குரிய காளைகொடியை விட்டு; கயல்கொடி எடுத்து-மீன் கொடியை உயர்த்தி; வழுதியாகி-ஒரு பாண்டிய மன்னனாகி; முழுது உலகு அளிக்கும்-உலகம் முழுவதும் செங்கோன்மை செலுத்திப் பாதுகாக்கும்; பேரருள் நாயகன் சீரருள்போல்-மிகுந்த அருளினையுடைய அவ்விறைவனது மிக்க புகழையுடைய அவ்வருள் கடவுள் மணத்துடன் உலகமுழுவதும் விரித்தாற்போன்று; மணத்துடன் விரிந்த கைதையங் கானத்து-நறுமனத்தோடே மலர்ந்த தாழைகளையுடைய நற்கடற் கரைச் சோலையிலே என்க.

     (வி-ம்.) கடுக்கை-கொன்றை; ஐவாய்: அன்மொழித்தொகை. ஐந்து வாயையுடைய பாம்பு என்க. விடை-காளை. இறைவன் தனக்குரிய மாலைமுதலியனவற்றை மரைத்துப் பாண்டிய மன்னனாய்ச் செங்கோல் செலுத்தி உலகினைப் பாதுகாத்த வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தே திருமனப்படலத்தில் காண்க. வழுதி-பாண்டியன். இறைவனுடைய அருள்விரிந்தாற் போன்று மலர்ந்த தாழை என்க. கைதை-தாழை. கானம்-கடற்கரைச் சோலை.

16 - 25: ஓடா.................................கொடியே

     (இ-ள்) கூறா மதியம் திருநுதல் கொடியே-பாதியாகிய திங்கள். மண்டிலம் போன்ற அழகிய நெற்றியையுடைய பூங்கொடி போன்ற எம்பெருமாட்டியே கேள்; நொச்சிப்பூ உதிர் நள்இருள் நடுநாள்-நொச்சியினது மலர் உதிராநின்ற செறிந்த இருளையுடைய இடையாமத்தே; ஓடா வென்றி பொலம் பூண் குரிசில்-போரின்கண் புறங்கொடாத வெற்றியினையும் பொன்னாலியன்ற அணிகலன்களையுமுடைய நந்தலைவனுடைய; விண் சுமந்து கிடந்த கொடிஞ்சி மாத்தோர்-முகில்களைத் தன்னுச்சியிற் சுமந்து கிடந்த கொடிஞ்சியினையும் குதிரைகளையுமுடையதேர்; சின்னம்-தோற்றம் செய்தென-இயங்கிய அடையாளமாகிய சுவடுகள் காணப்பட்டமையால்; மாறாக்கற்பின் அன்னை-மாறுபடாத கற்பொழுகத்தையுடைய நம் அன்னை; தன்கண் போலும் என்கண் நோக்கி-தன்னுடைய கண்ணையே போன்ற என்னை நோக்கி; கள்வரைக்காணும் உள்ளம் போலச் செம்மனம் திருகி- கள்வரைக் காண்போருடைய மனம் மாறுபட்டாற் போலத் தனது செம்மையுடைய மனம் மாறுபட்டு; உள்ளந்துடித்து-அம்மனந் துடித்து; புறன் வழங்காது-தன் மனக்கருத்தை வெளிப்படுத்திப் பேசாமல்; நெஞ்சொடு கொதித்தனள்-தன்