பக்கம் எண் :

மூலமும் உரையும்35



நெஞ்சம் புழுங்குவாளாயினள், ஆதலால் அவள் இக்களவொழுக்கத்தை அறிந்தனள் ஆதல் வேண்டும் என்க.

     (வி-ம்.) ஓடாவென்றி-புறங்கொடாத வெற்றி. ஓடாத என்னும் பெயரெச்சத்து ஈறு கெட்டது. பொலம்-பொன். குரிசில்-தலைவன். சினம்-அடையாளம். தேர்ச்சின்னம் தோற்றம் செய்தென என இயைத்துக்கொள்க. கொடிஞ்சி-தாமரைப்பூவடிவிற்றாய்ச் செய்து தேர்த்தட்டில் நட்டுவைக்கும் ஓருறுப்பு. கொடிஞ்சியையும் மாவினையும் உடைய தேர் என்க. மா-குதிரை. பெரியதேர் எனினுமாம். நல்லிருள்-செறிந்த இருள். நள்ளென்னும் ஓசையையுடைய இருள் எனினுமாம். விண்ணம் சுமந்து கிடந்த தேர் என இயைக்க. விண்ணம் என்புழி அம் இசைநிறை. தோற்றம் செய்தென-காணப்பட்டமையால். அதுகாறும் என்னைத் தன்கண்போலப் போற்றுபவள் இன்று என்னை நோக்கிக் கொதித்தனள் என்பாள் தன்கண்போலும் என்கண் என்றாள். தன்கண் என்புழி இரண்டாவதன்கண் ஏழனுருபு மயங்கிற்று. கள்வரைக் காண்போருடைய உள்ளம்போல என்க. மனந் திருகுதலாவது அன்புடைமையில் மாறுபடுதல். இயல்பாக மாறுபடாத அன்புடையாள் என்பாள் செம்மனந் திருந்தி என்றாள். புறன் வழங்குதலாவது மனம் புழுங்குவதற்குரிய காரணத்தை வெளிப்படையாகக் கூறுதல். கூறாமதியம்-எண்ணாட் பக்கத்துத் திங்கள். திருநுதற் கொடி: விளி.

     இதனைக் கொடியே! அன்னை கானலின்கண் நள்ளிருள் நடுநாளில் தேர்ச்சின்னம் தோற்றஞ் செய்தமையால் என்னை நோக்கி மனந்திருகித் துடித்து வழங்காது கொதித்தனள் என இயைத்துக்கொள்க. ஆதலால் இவ்வொழுக்கத்தினை நம்மன்னை அறிந்தாளாதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு-அச்சம். பயன்-வரைவுகடாதல்.