|
|
நிறைநீர்க் கயத்து ளொருதா ணின்று |
20
|
|
தாமரை
தவஞ்செய் தளியுடன் பெற்ற
திருமகட் கடுத்த தென்னென்
றொருமை காண்குவர் துகர்க்கிளைக் கொடியே. |
(உரை)
கைகோள்:
களவு. தோழி கூற்று.
துறை: வழியொழுகி வற்புறுத்தல்.
(இ-ம்.) இதற்கு ஆங்கதன் தன்மையின் வன்புறையுளப் பட என்னும் (தொல்-கள.
23) விதிகொள்க.
22: துகிர்..........................கொடியே
(இ-ள்) கிளை துகிர்
கொடியே-கிளையினையுடைய பவளக்கொடியை ஒத்த நங்காய் என்க.
(வி-ம்.) கிளைதுகிர்
கொடி என மாறுக. துகிர்க்கிளைக்கொடி: பன்மொழித் தொகை. விளி: தோழி தலைவியை
விளித்தபடியாம்.
1
- 9: பகை.....................................கொண்டால்
(இ-ள்) பகையுடன்
கிடந்த நிலை பிரி வழக்கினை-பழம் பகை உறவாகாது என்று எண்ணாமல் நெடுங்காலம் பகையோடு
கிடந்த தன் ஆட்சி நிலை தன்னைவிட்டு நீங்குதற்கேதுவான வழக்கினை; பொருத்தலும்-ஒருவாறு
தீர்த்து அப்பகைவரோடு கூடுதலும்; பிரித்தலும்-தனக்குத் துணையாவாரைத் தன்பானின்றும்
விலக்குதலும்; பொருபகை காட்டலும்-வலியும் காலமும் இடமுமறியாது தன்னோடு போர் செய்தற்குரிய
வலிய பகையை உண்டாக்கிஒ கோடலும்; உள் பகை அமைத்தலும்-புறப் பகைக்கிடனாக்கிக்
கொடுத்து அவர் வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகையை உண்டாக்கலும்; உணர்ந்து
சொல் பொருத்தலும்-தன் பகையாயினார் தனக்கு நல்லன போல வஞ்சகமாகத் தனக்குணர்த்தும்
சொல்லின் பயன் தெரியாது ஏற்றுக் கோடலும்; ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும்-தன்
ஆட்சித் தொழிலாகிய ஒன்றனுக்கு இருவேறு பகைவர் தோன்றியவழி அவ்விருவருள் ஒருவரோடு
கேண்மைகொண்டு அவரை ஏனையோர்பால் எடுத்துவிட்டுத் தன் றெழிலைத்தீராமல் அவ்விருபகையையும்
வளர்த்துக் கோடலும் ஆகிய இக்குற்றங்களையும்; செய்யா-செய்துவைத்து; அமைச்சுடன் சேரா-நல்லமைச்சரோடுங்
கூடுதலில்லாத; அரசன்-அறிவிலியாகிய ஒரு மன்னவனுடைய ஆட்சியிலமைந்த; நாடு
|