|
|
பிறைமதி
யன்ன கொடுமரம் வாங்கித் |
20
|
|
தோகையர் கண்ணெனச் சுடுசரந் துரக்கும்
எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதவிப்
புனகுடிக் கணியர்தம் மலர்க்கையே டவிழ்த்து
வரிப்புற வணில்வாற் கருத்தினை வளைகுரல்
கொய்யுன், காலமு நாள்பெறக் குறித்து |
25
|
|
நிலழுங்
கொடுத்தவ ரீன்ற
மழலை மகார்க்கும் பொன்னணி தற்கே. |
(உரை)
கைகோள்,
களவு. தோழிக்கூற்று
துறை: பிரிவருமை
கூறல்
(இ-ம்.) இதுவுமது.
(இ-ள்) உழையினம்-மானினங்காள்;
எம்பெறும் படிறு-எம்முடைய பெரிய குற்றத்தை; இன்று இயம்ப இப்பொழுது யாங்கள் நும்பாற்சொல்ல;
சிறிது நின்று கேண்மின்-சிறிது பொழுது நின்று கேளுங்கள்! என்க.
(வி-ம்.) தலைவன்
சிறைப்புறத்தே வந்து நிற்றலை அறிந்த தோழி அவன் வரவறியாள் போன்று மான்களுக்குக்
கூறுவாள்போல் அவன் கேட்பக் கூறத் தொடங்குபவள் அவற்றை விளித்துக் கூறுகின்றாள்.
படிறு-குற்றம். பெரும்படிறு சிறிது நின்றியம்ப என்புழிச் செய்யுளின்ப முணர்க. உழையினம்:
விளி; மானினம். இன்று இயம்ப என மாறிக் கூட்டுக. பொறுமையுடன் நின்று கேளுங்கள் என்பாள்
சிறிது நின்று கேண்மின் என்றாள்.
1
- 4: அண்டம்.......................................தன்னால்
(இ-ள்) அண்டம் ஈன்று
அளித்த கன்னி-எண்ணிறந்த அண்டங்கலையும் படைத்து அவற்றின்கண் வாழும் உயிர்களையும்
பாதுகாத்த கன்னிகையாகிய உமாதேவியார்; முனிவு ஆக-சினங்கொண்டாராக; அக்குறிப்பறிந்து;
திருநுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்-தன்னுடைய அழகிய நுதலின்கண் தோன்றிய நெருப்பாகச்
சுடா நுன்ற கண்ணினால்; மணிக்கரத்து அமைந்த ஆஇரம் வான்படையுடன்-அழகிய கையிலே அமைக்கப்பட்ட
எண்ணிறந்த சிறந்த படைக்கலன்களோடே; சயம் பெறுவீரனைத்தந்து அவன் தன்னால்-வெற்றி
பெறுமியல்யுடைய வீரபத்திரனைப் படைத்தருளிய அவனாலே என்க.
|